உப்பு கறி

தேதி: May 12, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் -- 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -- 100 கிராம்
பச்சை மிளகாய் -- 10 என்னம்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
அரைக்க:
தேங்காய் -- 1 துண்டு
மிளகு -- 1 டீஸ்பூன்
சீரகம் -- 3/4 டீஸ்பூன்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
கசகசா -- 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -- 10 என்னம்
தாளிக்க:
கடுகு,உளுந்து -- 1/2 டீஸ்பூன்
பட்டை -- 1 துண்டு
கிராம்பு -- 4 என்னம்
பிரிஞ்சி இலை -- 1 என்னம்


 

முதலில் கறியை சுத்தம் செய்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையுடன் சேர்த்து குக்கரில் போட்டு ஒரு வதக்கு வதக்கி எண்ணைய் ஊற்றி உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவேண்டும்.
அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊற்றி குக்கரை மூடவேண்டும்.
குக்கரில் 25 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
கறி நன்றாக பஞ்சு போல வெந்து இருக்கும்.
உப்பு கறி ரெடி.


சாதம், சப்பாத்தி, பரோட்டாவிற்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்