உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சுவரொட்டி கறி

 


தேவையானப் பொருட்கள்

  • சுவரொட்டி -- 1/4 கிலோ
  • சின்ன வெங்காயம் -- 100 கிராம்
  • பச்சைமிளகாய் -- 5 என்னம்
  • அரைக்க:
  • தேங்காய் -- 1 துண்டு
  • மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்

செய்முறை

  • கறியை எண்ணையுடன் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து கறி வெந்தவுடன் இறக்கி பரிமாறலாம்.
  • சுவரொட்டி கறி ரெடி.
  • இது சாதம், சப்பாத்தி, பரோட்டா விற்கு நன்றாக இருக்கும்.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 15 min 45 min
random food image


comments
ஹாய் சுபா மேடம்,
மே 12, 2008 - 7:43am - வழங்கியவர் mahisri

எனக்கு ஒரு சந்தேகம்.சுவரொட்டி என்றால் என்ன?

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

அன்புள்ள மஹி,
மே 13, 2008 - 1:38am - வழங்கியவர் Subha Jayaprakash

அன்புள்ள மஹி,
சுவரொட்டி என்பது மண்ணீரலைத்தான் சொல்லுவார்கள்.
இது சுவரில் ஒட்டினால் அப்படியே நின்று கொள்ளும்.
இதை அப்படியே சுட்டு கூட சாப்பிடுவார்கள்.