குழந்தைகளுக்கு அருமையான பண்டம் இது.விடுமுறை காலங்களில் டப்பா நிறைய பொரித்து வையுங்கள் உடனே காலியாகிவிடும்
தேவையானப் பொருட்கள்
- மைதா - கால் கிலோ
- தேங்காய் கட்டி பால் - 400 மில்லி
- சர்க்கரை - ஐந்து மேசை கரண்டி
- வென்னிலா எஸன்ஸ் - ஒரு தேக்கரண்டி
- முட்டை - ஒன்று
- தண்ணீர் - ஒரு டம்ளர்
- உப்பு - ஒரு பின்ச்
- கருப்பு எள் - ஒரு மேசை கரண்டி
- எண்ணை - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
-
- அச்சு முருக்கு செய்யும் கருவி கொண்டு எண்ணை சூடுபடுத்தி சூடான எண்ணையுல் அச்சை முதலில் விட்டு அப்படியே மாவில் தோய்த்து எண்னையில் விட்டு பொரித்தெடுக்கவும்.
-
- இப்படியே எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.
-
-
-
குறிப்பு
ஓவ்வொரு முறை பொரிக்கும் போதும் சூடான எண்ணையில் அச்சை முக்கி கொள்ளனும்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
சாப்பிடும் அளவை பொருத்து |
15 நிமிடம் |
20 நிமிடம் |