www.arusuvai.com
மீன் கட்லெட்
தேவையானப் பொருட்கள்
- மீன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
- கறிவேப்பிலை - 2 கொத்து பொடியாக நறுக்கியது
- இஞ்சி&பூண்டு - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
- உருளை கிழங்கு வேக வைத்து மசித்தது - 1
- உப்பு - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - 1/4 கப் பொடியாக நறுக்கியது
- முட்டை - 1
- ப்ரெட் க்ரம்ப்ஸ் - 3/4 கப்
- எண்ணை பொரிக்க - 1/2 கப்
செய்முறை
- முதலில் மீன் துண்டுகளில் மஞ்சள்,மிள்காய்த் தூள்,உப்பு தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்..அதிகம் எண்ணை வேண்டாம் என நினைப்பவர்கள் வெறும் உப்பு மட்டும் சேர்த்து வேக வைத்து பொடித்து கொள்ளுங்கள்.அதிகம் வாடை இல்லாத வகை மீன் தான் நல்லது
-
- பிறகு எண்ணை 2 ஸ்பூன் காயவைத்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்கவும்
-
- பிறகு அதில் இஞ்சி&பூண்டு நறுக்கியது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்
-
- பிறகு பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும் வதக்கவும்
-
- கொத்தமல்லி இலை சேர்த்து ,மசித்த உருளை கிழங்கும் சேர்த்து கலக்கி கைய்யில் வடை போல் தட்டவும்
-
- முட்டையை கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ளவும்..ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்கவும்.பின்பு தட்டிய மீன் வடைகளை முட்டையில் முக்கி
- ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்கவும்
-
- இப்படி எல்லா வடைகளையும் பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு நன்கு ஒட்டியிருக்கும்
-
- பின் எண்ணை 1/4 கப் காயவைத்து நான் ஸ்டிக் பானில் ஆறோ அல்லது அதற்கும் மேற்பட்ட வடைகளையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்
-