கீரைதண்டு தேங்காய் குழம்பு

தேதி: May 12, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரைதண்டு - 15 துண்டுகள்
சின்ன வெங்காயம் - 5 என்னம்
தக்காளி - ஒன்று (சிறியது)
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

கீரைதண்டு நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், சின்ன வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
தேங்காய்த்துருவல், சீரகம், பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவிழுதினை எடுத்துவைத்துவிட்டு, மிக்ஸியை 1 கப் தண்ணீர் விட்டு கழுவி அந்த தண்ணீரையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி, போட்டு நன்றாக வதக்கவும் அடுத்து கீரைதண்டை போட்டு வதக்கவும். அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் போட்டு வேக வைக்கவும். நல்ல தண்டு என்றால் சீக்கீரம் வெந்துவிடும்.
கீரைதண்டு வெந்தவுடன் அரைத்த விழுதினை சேர்த்து அதில் மிக்ஸியை கழுவி எடுத்து வைத்துள்ள தண்ணீர் ஒரு கப் விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
ஒரு கரண்டியால் கலவையை ஒரு தடவை கிளறி விட்டு, குழம்பில் உப்பு போதுமா என்று பார்க்கவும், தேவை என்றால் உப்பு போடவும்.
குழம்பு கெட்டியாக வேண்டுமாயின் தண்ணீர் சேர்க்க வேண்டாம், அல்லது ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
கலவை நுரைத்து வரும் போது இறக்கிவிடவும். கீரைதண்டு தேங்காய் குழம்பு தயார்.


கீரைதண்டுக்கு பதிலாக வெள்ளரிக்காய், தடியங்காய், சுரைக்காய் இவற்றைக் கொண்டும் இந்த குழம்பு செய்யலாம். நன்றாக நினைவில் கொள்ளவும் குழம்பு நுரைத்தால் போதும், கொதிக்க கூடாது, கொதித்துவிட்டால் தண்ணீர் தனியாகவும், தேங்காய் கலவை தனியாகவும் பிரிந்துவிடும். இந்த குழம்பு செய்ய 10 நிமிடம் தான் ஆகும் அதனால் பக்கத்திலேயே இருந்து செய்து முடிக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் கீரைத்தண்டு தேங்காய் குழம்பு செய்து பார்த்தேன். மிக நன்றாக இருந்தது.