உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

எலுமிச்சை பழ ரசம்

 

புளி ரசம் அடிக்கடி சாப்பிட கூடாது.இரத்ததில் புளிப்பின் அளவு அதிகரித்து விடும்.ஆகையால் தக்களி ரசம் , மோர் ரசம், எலுமிச்சை ரசம் , பிளம்ஸ் ரசம், அன்னாச்சி ரசம், வேப்பம் பூ ரசம் என்று வகை வகையாக செய்து சாப்பிடலாம்.

தேவையானப் பொருட்கள்

  • துவரம் பருப்பு - கால் டம்ளர்
  • தக்காளி - ஒன்று பெரியது
  • ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயப் பொடி - ஒரு பின்ச்
  • எலுமிச்சை - ஒரு பழம்
  • கொத்து மல்லி - சிறிது
  • தாளிக்க
  • -------
  • எண்ணை - இரன்டு தேக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • கருவேப்பிலை - சிறிது
  • பொடித்து தூவ
  • --------------
  • மிளகு - கால்தேக்கரண்டி
  • சீரகம் - கால் தேக்கரண்டி
  • தனியா - கால் தேக்கரண்டி

செய்முறை

  • பருப்பை குழைய வேகவைக்க வேண்டும்.
  • தக்காளியை நன்கு பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதி வந்து தக்காளி வெந்ததும் பருப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு மிளகு ,சீரகம்,தனியாவை பொடித்து சேக்க வேண்டும்.
  • கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
  • கடைசியில் எலுமிச்சை பழ சாற்றை பிழிய வேண்டும்.

குறிப்பு:

எலுமிச்சை ரத்திற்கும்,எலுமிச்சை சதத்திற்கும் எலுமிச்சையை பிழிந்து கொதிக்க விட்டக்கூடாது.

வழங்கியவர்

Jaleela


comments