எந்த Cooker (குக்கர்) வாங்கினால் நல்லது?!! - Suggestions please!

எந்த Cooker (குக்கர்) வாங்கினால் நல்லது?!!

சகோதரிகளே, இந்தியாவில் இப்பொழுது கிடைக்கும் குக்கர்களில் , எந்த குக்கர் வாங்கினால் நல்லது?!! என்னுடைய இரண்டு குக்கருமே வீணாகிவிட்டதால் உடனடியாக இந்திய பயணத்தின்போது வாங்கிவர எண்ணியுள்ளேன்.

தயவுசெய்து உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். மிக்க நன்றி! பதிலை ஆவலோடு எதிர்ப்பார்கிறேன்! கிடைக்குமென்றும் நம்புகிறேன்!!

1.first thing dont buy aluminium or Indalium cooker, more friends have this , but its not good for health for long run.

I ll come tomoro and tell u in detail
buy anodised cooker(which will be in non stick colour)in that u can cook directly all items

ரொம்ப நன்றி சிவவேல், உங்கள் பதிலுக்கு...

ஆமாம், எனக்கும் direct-aaka அதிலேயே சமைக்க ஏதுவான குக்கர் வேண்டும் என்று நினைத்திருந்தேன். கண்டிப்பாக நாளை வந்து இன்னும் நிறைய சொல்லுங்கள். காத்திருகிறேன்...

அன்புடன்
சுஸ்ரீ

எனக்கு தெரிஞ்சு நான் பாவிப்பது அலுமினியம் குக்கர்தான்..சில்வராம் யூஸ் பண்ணியாசு வேஸ்டா ஒரு மூலையில் இருக்கு.அடிக்கடி அடி பிடிக்கும்..டேஸ்ட் சரி இருக்கது...ஆனால் ஹெல்த்துக்கு நல்லது இல்லைன்னு சிவாவேல் சொல்வதுதான் இப்ப யோசனை?அது ஏன்னு சிவாவேல் சொல்லமுடியுமா?

பெஸ்ட் கம்பெனினா பிரஷ்டிஜ் தான்...தரமான குக்கர்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்கள் சமையல் பழக்கத்திற்கு தகுந்த குக்கரை தேர்ந்தெடுங்கள். பிரஸ்டீஜ், ப்ரீமியர்,ஹாக்கின்ஸ் எல்லாமே ரொம்ப நாள் உழைக்கும். ஹாக்கின்ஸ் உள்ளே பாத்திரம் வெச்சு சமைக்க முடியாது. ஏன்னா அது வாய்ப்பகுதி ரொம்ப குறுகியதா இருக்கும். பிரஸ்டீஜ் எங்க வீட்டில் ரொம்ப வருஷம்(27 வருஷம் போல) அம்மா வெச்சிருந்தாங்க. ஆனால் புது பிரஸ்டீஜ் அப்படி உழைக்கிறதில்லை. உடனே சேப்ட்டி வால்வ் போயிடுதுன்னு எனக்கு ப்ரீமியர்தான் வாங்கி கொடுத்தாங்க. பான் கூட ப்ரீமியர், பிரஸ்டீஜ் நல்லா இருக்கு. 3 வருஷம் முன்னாடி ஆனந்தா குக்கர் சின்ன சைசில் வாங்கி தந்தாங்க. அதுவும் நல்லா இருக்கு. என்னைக் கேட்டா உள்ளே பாத்திரம் வெச்சு சமைக்க முடியற குக்கர்தான் பெஸ்ட். அதில்தான் நாம அவசரத்துக்கு 2,3 அடுக்கு வெச்சுக்கூட சமைக்கலாம். அடிப் பிடிக்கும் பயம் இருக்காது. காப்பர் பாட்டம், நான் ஸ்டிக்லாம் குக்கரில் தேவையில்லை. அதிக சூடாகி குழைந்துவிடும், கருகிவிடும் அபாயம் உண்டு. சமையலில் எக்ஸ்பர்ட் என்றால் ஓகே. சாதாரண குக்கரில் இந்த தொல்லைகள் இல்லை.

அதே மாதிரி குக்கர் அலுமினியமாக இருப்பதுதான் நல்லது. ஸ்ட்ராங்காக இருக்கும். உள்ளே வைக்கும் பாத்திரங்களை எவர்சில்வராக வாங்கி உபயோகியுங்அள். குக்கர் அடுக்குகளே இப்போது அலுமினியத்தில் அவ்வளவாக கிடைப்பதில்லை. எவர்சில்வரில்தான் கிடைக்கிறது. எப்போது குக்கர் வாங்கினாலும் அதோடு 2 சேப்ட்டி வால்வ், கேஸ்கட் எக்ஸ்ட்ரா வாங்கி வைத்துக் கொண்டீர்கள் என்றால் சமயத்தில் கை கொடுக்கும். பழைய கேஸ்கட் லூசாகி விட்டால் உடனே தூக்கி எறிந்து விடாமல் அதனை ப்ரீசரில் சிறிது நேரம் வைத்திருந்து போட்டால் நீண்ட நாளுக்கு வரும்.

ஓஹ் தேவா பிரஸ்டீஜ் குக்கர்தான் நான் பாவிப்பது அவசரத்தில் மாற்றி கொடுத்து விட்டேன் மன்னிக்கவும்..நீங்க சொன்னது போல ஆனந்தாவும் நல்லாதான் இருக்கு ஆனா அடிக்கடி சேப்டி வால் போஇடுது ஆனா பிரஸ்டீஜில் அந்த பிராப்லம் இதுவரை வந்தது இல்லை...ஆனந்தாஇல் இப்ப ஒரு ஆப்பர் போட்டாங்க அதில் வாங்கியது அப்பப்ப லேச மக்கர் பொண்ணுது..
என்னிடம் ஹாக்கிங்ஸ்Yம் இருக்கு ஆனா அதை மாடார்ன்னு திறக்க மூட இதுக்கேல்லாம் ரொம்பவே பொறுமை வேனும்...எனக்கு சுத்தமா பொறுமை கிடையாது இப்ப அது போல இன்னும் சில குக்கர் மூலையில் ஊரில் போட்டாச்சு...நீங்கசொல்லும் டிப்ஸ் ரொம்ப நல்லாதான் இருக்கு இனி நானும் இப்படி கடைக்கு போனா வாங்கி வைத்த்ஜுடனும்..ஒன்னு போச்சுனாலும் ரொம்ப கஸ்டமாகிடுது சமைக்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Aluminium cookware is not recommended coz of leaching & they say that the chances of Alzheimer disease goes up if aluminium is used for regular cooking over a long period of time... there are various theories on this & many research being done & the results are only more & more confusing... so just to be on the safer side, you can try stainless steel cookers if u want...

அன்றும், இன்றும், என்றும் ப்ரெஸ்டிஜ் தான். இப்ப எங்க வீட்டிலே யாருக்கும் குக்கரில் சாதம் வடித்தால் பிடிப்பதில்லை. அதனால் சாதம் இட்லிப் பானையில் வடிக்கிறேன். பருப்புக்கு ஒரு சின்ன நான்ஸ்டிக் குக்கர் வாங்கி உபயோகிக்கிறேன். சமயத்தில் அதுவே குருமா, பாயசம், சாம்பார் எல்லாத்துக்கும் யூஸ் பண்ணிக்கறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மர்ழியா, Deva , Dsen, ஜெயந்தி மாமி,

அனைவருக்கும் ரொம்ப நன்றி பார் யுவர் வேல்யுபல் டிப்ஸ்!!

எனக்கு கொஞ்சமாக பிரியாணி, குருமா போன்றவை செய்ய இந்த மாதிரி Small Size ஒன்னு வேண்டும். அதுக்குவேனா மாமி சொன்ன மாதிரி Non-Stick வாங்கிக்கலாமா?!! ஹாக்கின்ஸ் விளம்பரம் பார்த்து இருக்கிறேன், அதுவும் நல்லா இருக்கு...

எங்கம்மா கூட ப்ரெஸ்டீஜ் குக்கர் தான் பல வருடங்களாக யூஸ் பண்ணராங்க... என்னிடமும் ஒரு ப்ரெஸ்டீஜ் பான் உள்ளது, கடந்த 12 வருஷமாக.. நல்லா உழைச்சது... கேஸ்கட் மட்டும் ஒரு இரண்டு , மூன்று முறை போட்டேன்... அவ்வளவுதான். ஆனால் இப்பதான் சமீபமாக ஹன்டில் உடைந்துபோய்விட்டது. : (

இன்னொன்று போன வருஷம் ஊரில் (MIL) குடுத்தது அலுமினியம் 5 லிட்டர் ப்ரெஸ்டீஜ் குக்கர், அது சரியாக இரண்டே இரண்டு முறை யூஸ் -க்கு அப்புறம் ஸேப்டி வால்வு போய்விட்டது! : (

So இப்பொ இருந்த 2 குக்கரும் போய், இங்கே Macy-ல் நம்ம ஊர் மந்தரா ப்ரண்ட்-இல் ஒரு குக்கர் வாங்கினேன்... நல்ல அழகான எவர் சில்வெர்-ல் .... ஒரு பெரிய குக்கர் பாட்டம் (bottom) , ஒரு பான் (pan) , இரெண்டுக்கும் சேர்த்து ஒரு மூடி, மற்றும் செட்டாக ஒரு பாஸ்தா (pasta) வேகவைக்கும் பாத்திரம் , காய்கறி வேகவைக்க என்று தனியாக ஒரு ஸ்டீம் பேஸ்க்கட் என்று ரொம்ப ஜோரா இருக்கு... : ) என்ன ஒரே ஒரு பிரச்சனை! இந்த குக்கர் விசில் அடிக்காத டைப்!! : ) நான் 10, 12 வருஷமா விசில் அடிக்கர டைப்பில் பழகிட்டு ரொம்ப பயந்து பயந்து குக்கர் வைக்கிறேன்.

வேற யாராவது இந்த மாதிரி குக்கர் யூஸ் பண்ணி இருக்கிறீகளா?! ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்...

அன்புடன்
சுஸ்ரீ

அனைவரும் நான் சொல்ல வன்ததை சொல்லிவிட்டார்கள்.இப்பொது நைலான் கேஸ் கட் கிடைகிரது, இது விலை அதிகம் அனால் 5 வருடம் வரை வரும்.டைரக்டாக சமைக்கும் குக்கரில் சாதம் வெகு சீக்ரம் வெந்து விடும்(helpfull for morning time rush).but u cant use for two purposes like boiling paruppu,and rice together.
I am having anodised prestige cooker(5.5ltr) that comes in usual shape, if i want to cook biriyani , ill do directly.
if i want to cook both rice and paruppu(which i do most of the days)at a time, i use two decked stainless steel vessel as DEVA told.(adhai cooker adukku endru solvargal cooker vangiya shop il vanginaen ).some times i put , potato or vegetable together with paruppu for my girl's lunch.if u choose cooker adukku choose , big bottom vessel for rice and upper small vessel for paruppu .

If u need direct cooking small quantity, nonstick(anodised) is best.prestige anodised also comes in 4 litre curve base(namma kadai shaped).

Even I have heard from my grandmother tat we should not keep food items in Aluminium containers particularly during nights.Not sure why only at nights.Maybe some scientific reason as u said.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்