உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

புளி பேஸ்ட்

 

இந்த புளி பேஸ்ட் செய்தெ வைத்து கொண்டால் வேலைக்கு செல்பவர்கள், கை குழந்தை வைத்திருப்பவர்களுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும்.இதை ஒரு மாததிற்கு தயாரித்து வைத்து கொள்ளலாம். பிரீஜரில் வைத்தால் ஆறு மாதம் கூட வைத்து உபயோகபடுத்தலாம்.

தேவையானப் பொருட்கள்

  • புளி - அரை கிலோ
  • தண்ணீர் - இரண்டு டம்ளர்

செய்முறை

  • ஒரு குக்கரில் புளியை போட்டு தண்ணீரும் ஊற்றி முன்று விசில் வீடு இரக்கவும்.
  • நன்கு ஆறியதும் நல்ல பிசந்து ஒரு பெரிய புளி கண் வடி கட்டியில் வடித்து பீரிஜரில் வைக்கவேண்டும்.
  • இது தேவைக்கு ஒன்று (அ) இரண்டு முன்று குழம்புக்கு ஏற்றவாறு எடுத்து போட்டு கொள்ளவேண்டியது.

குறிப்பு:

இதை குழம்பு செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்து வைத்து கொள்ளுங்கள் அப்ப தான் எடுத்து போட வசதியாக இருக்கும். இது ரசம் ,புளி குழம்புக்கு, வதக்கும் மசாலா வகைகலுக்கு எடுத்து போட ஈசியாக இருக்கும்.டெய்லி வெண்ணீரில் ஊற வைத்து பிசைந்து வடிக்க தேவை இல்லை அந்த வேலை மிச்சம்

வழங்கியவர்

ஜலீலா


comments
மிக்சியில் போடலாமா....!
மே 14, 2008 - 10:43am - வழங்கியவர் vimalakandaswamy

ஹலோ, ஜலீலா.உங்களின் பல திறமைகளை கண்டு ஆச்சரியமும்,பெருமையும் பட்டு இருக்கிறேன்,சின்ன வயதிலும்பல விஷயங்களிலும்தெரிந்து,பலருக்கு
ம் உதவியாக இருக்கிறீர்கள்...மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.இந்த
புளி பேஸ்டில்,புளியை மிக்சியில்,அடித்து வடிகட்டலாமா?இல்லை கைகளால்தான் பிசையனுமா?
அன்புடன் விமலா.

ஹலோ விமலா
மே 14, 2008 - 10:57am - வழங்கியவர் thalika

ஹலோ விமலா எங்கே இருந்தீர்கள்?எங்கோ தலைமறைவாகிவிட்டீர்களா?
அந்தக்கா வருவாங்க பாருங்க..ஆனால் புளிகரைசலை மிக்சியில் போட்டு அடித்தால் அதன் சக்கையோடு சேர்த்து அரையும் பிறகு வடிகட்ட கஷ்டம்...ஆனால் கைய்யால் பிழிந்தால் சுலபமாக வரும்

பின் லேடன்...........!!
மே 14, 2008 - 11:48am - வழங்கியவர் vimalakandaswamy

ஹாய் தளிகா,நலமாயிருக்கிறீர்களா?
ரீமாக் குட்டிநலமா!

நான் என்ன பின்லேடனா...தலைமறைவாக இருக்க...
நிறைய வேலைகள்,இருந்தாலும் அறுசுவை பார்க்காமல், ஒரு சின்ன விசிட் அடிக்காமல் இருப்பதில்லை. என்னோட,பெரிய ஆசுவாசமேஅறுசுவைதான்.நிறையபுதும
ுகங்கள்.. இனிமேல் கொஞ்சம் கலந்துக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆமாம், ஹேமா,ஹர்ஷினிஎங்கே போனார்கள்?
அப்புறம் வருகிறேன்,
அன்புடன் விமலா.

விமலா புளி பேஸ்ட்
மே 15, 2008 - 8:57am - வழங்கியவர் Jaleela Banu

புளி பேஸ்ட்

விமலா ஆறியதும் நல்ல பிசைந்து தான் வடிகட்டனும்.

ஜலீலா

hi jallela help
மே 15, 2008 - 9:40am - வழங்கியவர் jayanthivinay

once i prepared easy chicken fry ,it includes all the powders and tomoto puree and curry leaves,first boiled the chicken and fry it in the kadai with the water till it become dry.thing is i want to prepare it today but i couldnt find that recipe in ur column and under chicken topic,so plez help me to find that.
thanks.

ஜெயந்தி நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு
மே 16, 2008 - 5:51am - வழங்கியவர் Jaleela Banu

ஜெயந்தி நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு

என்னுடைய சிக்கன் ஷேலோ பிரை பாருஙக்ள்
சிக்கனை வேகவைத்து தண்ணீர் முழுவதும் சுன்டிய வுடன் என்னையில் வருக்கனும்.
அஞ்சலிக்கும் விஜயாவிற்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நாலைக்கு வந்து நிறைய வாழ்த்துகிறேன்.

ஜலீலா