பிரியாணி, புலாவ், பிரிஞ்சி என்ன வித்யாசம்?

ஹோட்டலில் பாஸ்மதி அரிசி குழையாமல் நல்ல முல்லை பூ போல் வெள்ளையாகவும் தனி தனியாகவும் வெந்து நல்ல ருசியாகவும் இருக்கிறது. அது எப்பிடி?எதாவது தனிபட்ட சமையல் முறை உள்ளதா?

எந்த பாஸ்மதி அரிசி நல்லது? எத்தனை பங்கு தண்ணீ வைக்கவேண்டும். டைரக்டா குக்கரில் உள்ளே பாத்திரம் வைக்காமல் வைத்தால் எவ்வளவு கப் தண்ணி வைக்கவேண்டும். தேங்காய்பால் சேர்த்து செய்யும் போது எவ்வள்வு தண்ணி வைக்கவேண்டும். எத்தனய் விசில் ? ப்ளிஸ் சொல்லுங்க?
நன்றி. நான் ரைஸ் குக்கரில் தான் செய்து கொண்டிருக்கேன்.

விஜி தரமான பாசுமதி அரிசி உபயோக படுத்தனும்.
அரிசி உலை கொதிக்கும் போது ஒரு சொட்டு லெமென் ஜூஸ் ஊற்றலாம்.
இல்லை எண்ணை ஊற்றலாம்.பிறகு அரிசியை போட்டு பிசைந்து களைய கூடாது உடைந்து விடும்.

ஜலீலா

Jaleelakamal

காணமல் போறிங்க? அது சரி நிங்க எந்த ப்ராண்ட் யூஸ் பன்றிங்க? எவ்வளவு தண்ணி விட்டு குக் பன்றிங்க.

அரிசிய நல்ல 20 நிமிடம் ஊறவைத்தால் ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்ணீர் வைக்கனும்.

இல்லை ஒன்னுக்கு இரண்டு தண்ணீர் வைத்து குக்கரை மூடி போட்டாமல் நல்ல அரிசி தட்டி கொதிக்க விட்டு பாதி கொதித்து கொண்டு இருக்கும் போது மூடி போட்டு முன்றாவது விசில் வந்ததும் உடனே ஆஃப் பன்னி அந்த சூட்டுடன் கீழே இரக்கி வைத்து குக்கர் வெயிட் சத்தம் அடங்கியதும் உடனே கரண்டியின் பின் புறத்தால் கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடுவது நல்லது இல்லை நீங்கள் அப்படியே வீடு விட்டு சாப்பிடும் போது எடுத்தால் ஹல்வா மாதிரி ஒட்டி கொள்ளும்.
ரைஸ் குக்கருக்கு ஒன்றுக்கு ஒன்னறை போதுமானது. ஆனால் அரிசியை ஊற வைத்து கொள்ளுங்கள்
பிரியாணிக்கு 20 நிமிடம் ஊறவைக்கனும்.
பிளெயின் ரைஸுக்கு பத்து நிமிடம் போதுமானாது , ஊறினாலும் தப்பில்லை.

பச்சரிசி ஏழு நிமிடத்திற்குள் வெந்து விடும். இதே அளவு தான் தேங்காய் பாலுக்கும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா,
ரொம்ப உபயோகமான தகவல்.நன்றி அக்கா.

விஜி முன்பு பிளையிங் ஹார்ஸ், அது இப்போது கிடக்கல, இல்ல குஷ்பு,மும்தாஜ் ஹா ஹா விஜி நான் அரிசியை சொல்கிறேன்,
எந்த அரிசியா இருந்தாலும் நாம் சமைக்கும் விதத்தில் இருக்கு.
நீங்கள் அமெரிக்கா தானே ராயல் பிரேண்ட் கிடைக்குதான்னு பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஆமாம், ஜலீலாக்கா சொல்வது சரிதான்!. இங்கு (US)-ல் கிடைக்கும் Royal brand நன்றாக இருக்கிறது. நான் அதுதான் வாங்குகிறேன். 10 - 15 நிமிடம் ஊற வைத்துவிட்டு 1 : 1.5 ratio தண்ணீர் விட்டால் சரியாக இருக்கும். Try பண்ணி பாருங்கள்.

அன்புடன்
சுஸ்ரீ

நான் சமையல்ல இன்னும் பேசிக் தான். எப்போதும் சட்னி நல்லா தான் அரைப்பேன், ஆனா இன்னக்கி ரொம்ப சொதப்பிட்டேன். உப்பு அதிகமா போய்டுச்சு, என்ன பண்றதுன்னு தெரியல, நம்மலாலயே சாப்பிட முடியலயேன்னுட்டு வேற சட்னி அரைத்தேன், ஆனா முன்னடி செய்தது வேஸ்டா போச்சு. எனக்கு மனசே சரியில்ல இவ்வளவு பொருள் வேஸ்ட் ஆகுதேன்னு. இதை எப்படி சமாளிப்பது.

எந்த சட்னி செய்தீர்கள்.. தேங்காய்/பொட்டுகடலை சட்னியா... அப்படி என்றால்...
உப்பு குறையும் வரை பொட்டுகடலை / கொத்தமல்லி/வதக்கிய புதினா/பூண்டு .. இதில் ஏதாவது சேர்த்து.. துவையல் மாதிரி செய்து ரசம் அல்லது பருப்பு சாதத்துக்கு தொட்டுகொள்ள வையுங்க...
Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்