உருளை டிக்கி

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - அரை கிலோ
ப்ரெட் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 4
கொத்தமல்லித்தழை - அரைக்கட்டு
ரொட்டித்துண்டுகள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு


 

உருளைக்கிழங்கினைச் சுத்தம் செய்து நன்கு வேகவைத்து எடுத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டுகளை நீரில் ஊறவைத்து, ஊறியபிறகு எடுத்து நீரினைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் பிரெட், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு இவற்றை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, கையினால் வடை போல் தட்டி, எண்ணெய்யில் சுட்டெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்