நண்டு ரோஸ்ட்

வழங்கியவர் : rasia
தேதி : செவ்வாய், 13/05/2008 - 16:23
ஆயத்த நேரம் : 20 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
- நண்டு - ஒரு கிலோ
- பெரிய வெங்காயம் - ஒன்று
- கரம் மசாலா பவுடர் - ஒரு தேக்கரண்டி
- சீரகப்பவுடர் - ஒரு தேக்கரண்டி
- மிளகு பவுடர் - 3/4 தேக்கரண்டி
- மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- தேங்காய்பால் - 4 மேசைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- நண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும், வெங்காயத்தை பொடிதாக நறுக்கவும்.
- வாயகன்ற கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
- பிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும்.
- பிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும். பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- மிதமான தீயில் மூடி வேகவிடவும், அடிக்கடி திறந்து கிளறி விடவும், நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா கெட்டியானவுடன் இறக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
3 நிமிடங்கள் 39 sec முன்பு
26 நிமிடங்கள் 49 sec முன்பு
31 நிமிடங்கள் 27 sec முன்பு
37 நிமிடங்கள் 9 sec முன்பு
41 நிமிடங்கள் 30 sec முன்பு
47 நிமிடங்கள் 32 sec முன்பு
52 நிமிடங்கள் 41 sec முன்பு
ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் முன்பு
29 நிமிடங்கள் 18 sec முன்பு