www.arusuvai.com
நண்டு ரோஸ்ட்
தேவையானப் பொருட்கள்
- நண்டு - 1 கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- கரம் மசாலா பவுடர்- 1 டீ ஸ்பூன்
- ஜீரகப்பவுடர் - 1 டீஸ்பூன்
- மிளகு பவுடர்- 3/4 டீஸ்பூன்
- மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்
- எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவைக்கேர்ப்ப
- தேங்காய்ப் பால்- 4 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
செய்முறை
- நண்டை சுத்தம் செய்து துன்டங்கள் செய்யவும்,
- வெங்காயத்தை பொடிதாக நருக்கவும்
- வாயகன்ற கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணை விடவும்
- சூடானதும் அதில் நருக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிரமாகும்வரை வதக்கவும்
- பிறகு அதில் மிளகாய்ப்பவுடர் போட்டு வதக்கி மேலும் அதில் இஞ்சிபூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளரவும் பிறகு அதில் நண்டு துண்டங்களைப்போட்டு கிளரவும்
- பிறகு அனைத்து மசாலாபொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்ப்பால்,மற்றும் உப்பு சேர்த்து கிளறவும் மிதமான தீயில் மூடி வேகவிடவும்,அடிக்கடி திறந்து கிளறிவிடவும்,நன்றாக வெந்து எண்ணை பிரிந்து மசாலா கெட்டியானவுடன் இறக்கவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
20 நிமிடம் |
20 நிமிடம் |