உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

உருளை கறி & பஃப் பேஸ்ரி

 


தேவையானப் பொருட்கள்

  • கறிக்கு:
  • =======
  • உருளைக்கிழங்கு - 3
  • வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
  • வெட்டிய உள்ளி - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • கறித்தூள்/சாம்பார் தூள் - 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • கடுகு
  • சீரகம்
  • உப்பு
  • எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
  • பஃப் செய்ய:
  • ==========
  • பைலோ ஷீட் - 1 பக்கெட்
  • மைதா மா - 2 மேசைக்கரண்டி

செய்முறை

  • உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து அவிக்கவும்.
  • கிழங்கு அவிந்ததும் வடித்து எடுத்து உதிர்த்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய், கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். பின் அதனுள் கறித்தூளையும் சேர்த்து வதக்கவும்.
  • கலவை வதங்கியதும் அதனுள் உப்பு, உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கை கொட்டி கிளறவும்.
  • கலவை ந்னகு சேர்ந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி வைக்கவும்.
  • பின்னர் பைலோ பேஸ்ரி ஷீட்டை மாத்தூவிய ஒரு தட்டில் பொட்டு சிறிய துண்டுகளாக வெட்டி அதனுள் இந்த கறிய வைத்து மூடவும்.
  • உரிளைக்கிழங்கு கறி இல்லாவிட்டால் சன்னா மசாலா வைக்கலாம்.
  • அல்லது சோயா மீற் (சோயா உருண்டை) கறி வைக்கலாம்.
  • பின்னர் மூடிய பேஸ்ரிகளை பேக்கிங் தட்டில் அடுக்கி அவனில் வைத்து சூடாக்கி எடுக்கவும். (எவ்வளவு நேரம், எவ்வளவு சூடு என்பன பைலோ ஷீட்டின் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்ப செய்யவும்)
  • சுவையான இலகுவான பேஸ்ரி தயார். இதனை கெட்ச்சப் அல்லது சட்னியுடன் அல்லது அப்படியேயும் சாப்பிடலாம்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3/4 நபர்களுக்கு 20 - 30 நிமிடங்கள் ~15 நிமிடங்கள்
  random food image


comments