கோதுமைமாவு ரொட்டி

தேதி: May 14, 2008

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - ஒரு கப்(பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 1/2 கப்(பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயத்தையும், பச்சைமிளகாய்யையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் வதக்கியவற்றைப் போட்டு, உப்பும் போட்டு தண்ணீர் விட்டு பிசையவும்.
பிசைந்த மாவு கொஞ்சம் தண்ணீர் கோர்த்து இருக்கவும். அதை பெரிய உருண்டை வடிவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைக்கவும்.
ஒரு வாழை இலை துண்டில் அல்லது பால்கவரிலோ எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கையினாலே ரொட்டியை தட்டி பரப்பவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பரப்பின ரொட்டியை பிரித்துப் கல்லில் போட்டு எண்ணெய்விட்டு மறுபக்கமும் திருப்பி போட்டு ரொட்டி வெந்தபின் எடுக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ரொட்டியைச்சுடவும்.
காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. தக்காளி தொக்கு அல்லது தக்காளி ஊறுகாய் வைத்து பரிமாறவும்.


ஆனால் பிசையும் பதம் சப்பாத்திக்கு பிசைவது போலோ, தோசை மாவு பதத்திற்கோ இருக்க கூடாது. பரப்பின ரொட்டிமாவினை வாழை இலையில் இருந்து பிரிக்க முடியவில்லை என்றால் வாழை இலையோடு ரொட்டிமாவின் பக்கம் தோசைகல்லில் போட்டு ஒரு செகண்ட்டில் இலையை எடுத்துவிடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்தே ரொட்டிகளைச் சுட்டு எடுக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வழமையாகச் செய்வதுதான். இந்த முறை உங்கள் அளவுகள் + சீரகம், நன்றாக இருந்தது. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்