குடல் தட்டாம்பயறு

தேதி: May 14, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குடல் -- 1/2 கிலோ (நன்றாக சுத்தம் செய்து வேகவைத்தது)
தட்டாம்பயிறு -- 200 கிராம் (தனியே வேகவைத்தது)
இரத்தம் -- 2 கட்டி (நன்கு கரைத்தது)
கடுகு, உளுந்து -- 1/4 டீஸ்பூன்
பட்டை -- 1 அங்குலம் அளவு
சின்ன வெங்காயம் -- 1 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 4 என்னம் (நீளமாக நறுக்கியது)
சாம்பார் பொடி -- 1 ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் -- 1 துண்டு
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
கசகசா -- 1/2 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பட்டை போடவும்.
பின் வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி அரைத்த கலவையை ஊற்றவும்.

அதனுடன் வேகவைத்த தட்டாம்பயிறு, குடல் இரண்டையும் போட்டு இரத்தத்தை ஊற்றி கலந்து அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு எண்ணைய் மேலே மிதந்து வந்ததும் இறக்கவும்.
இது சாப்பாட்டிற்கும், தோசை, சப்பாத்தி, பரோட்டாவிற்கும் ஏற்றது.


மேலும் சில குறிப்புகள்