தேவையான பொருட்கள்
- மாம்பழம் - 2 (நல்ல பழுத்தப்பழம்)
- பால் - 3 கப்
- தேன் - 2 டேபிள் ஸ்பூன்
- வெண்ணிலா ஐஸ்கிரீம் - 100 ml
- செரிப்பழம் - 4 எண்ணம்
|
செய்முறை
- 1.மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
- 2.மிக்ஸியில் மாம்பழதுண்டுகளை போட்டு ஒரு முறை ஓட்டவும்,பிறகு தேன்,2 கப் பால் ஊற்றி மிக்ஸியை மறுபடியும் ஓட்டவும்.
- 3.பின்னர் ஒரு பாத்திரத்தில் ஷேக்கை எடுத்துவைத்துவிட்டு அதில் மீதமுள்ள 1 கப் பால் ஊற்றி ஒரு ஸ்பூனால் நன்றாக கிண்டிவிட்டு பாத்திரத்தை எடுத்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்
- 4.மாம்பழ ஷேக்யை கண்ணாடி கப்பில் விட்டு அதன் மேல் ஒரு குழி கரண்டி வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து,அதன் மேல் ஒரு செரிப்பழத்தைவைத்து பரிமாறவும்
|
குறிப்பு:
1.தினமும் வாங்கும் பால் என்றால் காய்ச்சி 2 மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்,வெளிநாடுகளில் பால் காய்ச்சி டப்பாக்கலில் வைத்திருப்பதால் காய்ச்ச தேவையில்லை
2.மேலே குறிப்பிட்ட அளவு இனிப்பு போதும்,தேவைப்பட்டால் சீனி 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும் அல்லது தேனே கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்.
வழங்கியவர்
மஹாபிரகதீஸ்,China
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 |
2 hrs |
10 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -