எள்ளோதரை

தேதி: May 15, 2008

பரிமாறும் அளவு: 2 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - ஒரு டம்ளர் ( 200 கிராம்)
பொடி செய்ய:
எள் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
பெருங்காயம் - ஒரு சிறுத் துண்டு
உப்பு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்க வேண்டும்.
எள்ளை கல் இல்லாமல் களைந்து வறுத்து எடுத்து விட்டு அதே வாணலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மீதி உள்ளதையும் வறுத்து எள்ளையும் சேர்த்து பொடி செய்து சாதத்தில் தூவி நன்கு கிளற வேண்டும்.
பிறகு மீதி இருக்கும் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி கிளறி இறக்க வேண்டும்.


எள் மணத்தோடு இந்த சாதம் சுவை தூக்கலாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சமைத்து அசத்தலாம்....புது த்ரட் - டிற்காக ஜலீலாவின் எள்ளோதரை செய்தேன். நல்ல மணம். சுவையும் நன்றாக இருந்தது. எள் மட்டும் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொண்டேன். மற்றபடி சூப்பர்..!!

மாலதி யக்காவ் வந்துவிட்டீர்களா?பேத்தி , பொண்ணு பையன் எல்லோரும் நல்மா?

எள்ளோதரை நல்ல இருந்ததா? ரொமப் நன்றி. நீங்களே சூப்பரா செய்வீர்கள். என்னைவிட அனுபவம் அதிகம் உங்களுக்கு நீங்களும் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal

ஹாய்க்கா,
இன்று எள்ளோதரை செய்தேன். கொத்து மல்லி துவையலுடன் சாப்பிட நன்றாக இருந்தது. செய்யும் போதே எள் மணம் உடனே சாப்பிட தூண்டியது. ஆனால், படம் எடுப்பதற்குள் ஆறி விட்டது (அவ்ளோ குளிருக்கா இங்க). ஒரு வேளை சூடா இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் என்று நினைக்கிரேன். அதொடில்லாம இந்தியா வரமிளகா யூஸ் பன்னியதால் காரம் அதிகமாயிடுச்சு. (உலகத்திலேயே நம்ம இந்திய மிளகாய் தான் காரத்தில ஃபஸ்ட்.)
இங்க எல்லோரும் என்னிடம் அப்படியா என்று கேட்பார்கள். நிஜமா அதை நான் இன்று நல்லாவே ரியலைஸ் பன்னினேன். இனி யாராவது கேட்டால் வேகமாக ஆமாம் ஆமாம்னு சொல்லுவேன்.

இப்படிக்கு
இந்திரா

indira

செல்வி இந்திரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த எள்ளோதரையின் படம்

<br /><img src="files/pictures/ellodharai.jpg" alt="Ellodharai" />