தேவையான பொருட்கள்
- வேக வைக்க
- ---------
- உருளை - ஒன்று
- கேரட் - அரை
- கருனை கிழங்கு - ஒரு சிறிய துண்டு
- காளி பிளெவர் - ஆறு பூக்கள்
- பட்டாணி - இரண்டு மேசை கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- அரைக்க - 1
- ---------
- பட்டை - ஒரு சிறு துண்டு
- கிராம்பு -ஒன்று
- இஞ்சி - ஒரு சிறு துண்டு
- பச்ச மிளாகாய் - இரண்டு
- கொத்து மல்லி - கால் கட்டு
- பூண்டு - ஒன்று
- தேங்காய் துருவல் - ஒரு மேசை கரண்டி
- தனியா - கால் தேக்கரண்டி
- அரைக்க - 2
- ------------
- முந்திரி - நாலு
- வருத்த வேர்கடளை - நாலு
- எள் - கால் தேக்கரண்டி
- கசகச - கால் தேக்கரன்டி
- சோம்பு - கால் தேக்கரன்டி
- தாளிக்க
- --------
- பட்டர் - இரண்டு தேக்கரண்டி
- எண்ணை - இரண்டுதேக்கரண்டி
- பட்டை - சிறு துண்டு
- கிராம்பு - ஒன்று
- கருவேப்பிலை - ஆறு இதழ்
|
செய்முறை
- முதலில் காய்களை பொடியாக அரிந்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசி விட்டு இரக்க வேண்டும்.
- பிறகு அரைக்க கொடுத்துள்ள இன்று, இரண்டை தனி தனியாக அரைத்து வைக்க வேண்டும்.
- இப்போது ஒரு சட்டியில் பட்டர் + எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள ஒவ்வொன்றாக போட்டு கொதிக்க விட்டு, வெந்த காயையும் சேர்த்து மேலும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ரொம்ப திக்காக இருந்தால் தேவைக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- மொத்தம் முன்று டம்ளர் தண்ணீர் போதுமானது.
- நல்ல கொதி வந்ததும் இரக்கி சாப்பிட வேண்டியது தான்.
|
குறிப்பு:
இன்னும் ஒன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காய்களை கொஞ்சம் மசித்து கொள்ளுங்கள்.
இது சப்பாத்தி,ரொட்டி, இடியாப்பம்,ஆப்பம், தோசை எல்லாத்துக்கும் ஏற்றது.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
நான்கு நபர்களுக்கு |
20 நிமிடம் |
10 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
4 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 27 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -