கத்திரிக்காய் ரெய்தா

தேதி: May 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நல்ல பெரிய கத்திரிக்காய் - கால் கிலோ
தயிர் - 100 மில்லி
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
உப்பு - அரை தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி (வறுத்து பொடி செய்தது)
கொத்தமல்லி தழை - கால் கப் (பொடியாக நறுக்கியது)
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று


 

கத்திரிக்காயை மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வேக வைத்து தோல் எடுத்து விட்டு அதை பொடியாக நறுக்கி ஒரு போஃர்கால் நல்ல குத்தி மசித்து கொள்ள வேண்டும்.
தயிரில் வெங்காயம், பச்சை மிளகாய், சீரகதூள், கொத்தமல்லி பொடியாக நறுக்கி போட்டு உப்பும், மசித்த கத்திரிக்காயும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பிறகு எண்ணெயை காய வைத்து கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கலக்கி வைத்துள்ள தயிரில் சேர்த்து சாப்பிட வேண்டியது தான்.
சுவையான கத்திரிக்காய் ரெய்தா தயார்.


இது பிரியாணிக்கும், மற்ற சாத வகை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். பெரிய கத்திரிக்காய் என்றால் அதில் விதை அவ்வளவாக இருக்காது,

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா ஒரு கேள்வி!!!
மைக்ரோவேவில் எண்ணை தடவி வேக வைக்கனுமா இல்லை சும்மாவே வேக வைத்தால்
போதுமா??

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா எண்ணை தடவ தேவையில்லை, சும்மா ஒரு பவுளில் தண்னீர் ஊற்றி கட் பண்ணி போட்டு வைத்தால் இரண்டு நிமிடத்தில் வெந்து விடும். தோல் எடுத்து விட்டு அந்த பிளெஸ் மட்டும் தானே எடுக்க போறோம்.

ஜலீலா

Jaleelakamal

யக்கோவ் என்று ஒரு குரல் யாருன்னு தெரியல அங்கே உள்ளே நுழைய முடியல, ஆனால் மர்லியா தான் என்னை அப்படி கூப்பிடுவார்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா மர்ழியா இன்னும் வரவில்லை.இது கவிசிவா.நலமா?ரம்ஜானுக்கு என்ன ஐட்டம் எல்லாம் செய்ய போரீங்க?லிஸ்ட்டை கொடுங்க(ரெசிப்பியும்தான் :))
அப்படியே தீபாவளிக்கு செய்து அசத்திடுவோம்ல

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!