முருங்கைக்கீரை அடை

தேதி: May 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி- 1 கப்
புழுங்கலரிசி- 1 கப்
துவரம்பருப்பு- அரை கப்
கடலைப் பருப்பு- அரை கப்
வற்ரல் மிலகாய்-6
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
பொடியாக அரிந்த முருங்கைக்கீரை- 1 கப்
காரட் துருவல்- அரை கப்
பொடியாக அரிந்த வெங்காயம்- கால் கப்
தேங்காய்த்துருவல்- கால் கப்
தேவையான உப்பு


 

பருப்பு வகைகளையும் அரிசி வகைகளையும் போதுமான நீரில் 3 மணி
நேரம் ஊறவைக்கவும்.
ஊறியவைகளை சோம்பு, மிளகாய் வற்ரல், தேவையான உப்பு, காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வெங்காயம், துருவல்கள், கீரையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
மெல்லிய அடைகளாய் சுட்டெடுக்கவும்


மேலும் சில குறிப்புகள்