உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கறி உருண்டை



தேவையான பொருட்கள்

  • கொத்திய கறி- கால் கிலோ
  • சோம்பு- 1 ஸ்பூன்
  • வற்றல் மிளகாய்-10
  • கடலைப்பருப்பு- 1 கப்
  • பொட்டுக்கடலை- 1 கப்
  • பூண்டு - 20 பற்கள்
  • கசகசா- 1 ஸ்பூன்
  • தேங்காய்த்துருவல்- 1 கப்
  • வதக்கிய வெங்காயம்-1 கப்
  • முட்டை-1
  • தேவையான உப்பு
  • தேவையான எண்ணெய் பொரிப்பதற்கு
  • மஞ்சள்தூள்- 1 ஸ்பூன்

செய்முறை

  • கறி, பருப்புகள், மிளகாய், மசாலா சாமான்கள், பூண்டு, தேங்காய் அனைத்தையும் ஒரு வாணலியில் போட்டு கால் கப் நீர் விட்டு மிதமான தீயில் வதக்கவும். நீர் சுண்டியதும் வதக்கியதை ஆற விடவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள், முட்டை, வதக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • சிறு சிறு உருண்டைகள் உருட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


comments
Mano Madam
மே 15, 2008 - 8:07pm - வழங்கியவர் portiamanohar

Portia Manohar,
will it be good if i use the keema balls recipe which you gave here for urundai kulambu

அன்புள்ள போர்ஷியா மனோஹர்!
மே 20, 2008 - 4:54am - வழங்கியவர் Mrs.Mano

கறி உருண்டை குழம்புக்கும் இந்த கறி உருண்டைகளை உபயோகிக்கலாம். நேரடியாகப் போடாமல் ஆவியில் வேக வைத்து அப்புறம் குழம்பில் சேர்க்கலாம்.

Thanks Mrs. Mano
மே 20, 2008 - 8:17pm - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
Will try this week end and will let you know the comments.

mano madam
ஜூன் 19, 2008 - 8:43pm - வழங்கியவர் saraswathi

முதலில் வணக்கம் உங்களுக்கு,
கறி உருண்டை செய்யும்போது எண்ணை 1ஸ்பூன் விட்டுதான் எல்லவற்றையும் வதக்குவோம். கறியை வதக்கும்போதுஅதிலிருக்கும் தண்ணீரே வதங்க நேரமாகும்.
நீங்கள் 1/4கப் தண்ணீர் உற்றி வதக்க சொல்லியிருக்கிறிர்கள். மறதியாக எழுதியிருப்பதாக தெரிகிறது. சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.

அன்புள்ள சரஸ்வதி!
ஜூன் 24, 2008 - 5:05am - வழங்கியவர் Mrs.Mano

என் மகனின் நிச்சயதார்த்த வேலைகளில் மூழ்கியிருந்ததால் சற்று தாமதமாக, இப்போதுதான் உங்களின் சந்தேகத்தைப் பார்க்க நேர்ந்தது.
நான் மறதியாக எதுவும் எழுதவில்லை. கறி கோளா, கறி உருண்டைகளை பல வகைகளில் செய்யலாம். இந்த முறையை கடலூரைச் சேர்ந்த என் உறவினரிடம் கற்றேன். சிறிய தீயில் ஏற்கனவே ஈரப்பசை உள்ள கொத்துக்கறி கால் தம்ளர் நீரில் வெந்து விடும். இந்த முறையில் அரைக்கப்பட்டு செய்யப்படும் கோளா மிகவும் மிருதுவாக இருக்கும். இன்னும் சிலர், பாதி பச்சையாக எடுத்து வைத்து விட்டு, பாதியை இதுபோல வேக வைத்து இரண்டையும் கலந்தும் அரைப்பதுண்டு. இன்னும் சிலர் இதுபோல முதலிலேயே தண்ணீர் சேர்க்காமல் சிறிது சிறிதாக தண்ணீரைத்தெளித்து கறிக்கலவை சுருண்டு வரும்வரை வதக்குவதும் உண்டு. உங்களின் சந்தேகம் தீர்ந்திருக்குமென நினைக்கிறேன்.