சௌ சௌ தொக்கு

தேதி: May 15, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சௌ சௌ - ஒன்று
பச்சை மிளகாய் - 3
புளி - சிறிய நெல்லிகாய் அளவு
தேங்காய் துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
உளுந்து - ஒரு தேக்கரண்டி


 

சௌசௌவை தோலுடன் நன்கு கழுவி சிறிய துண்டுகளாக்கவும். பச்சைமிளகாய் பொடியாக கட் செய்யவும்.
தவாவில் எண்ணெய் விட்டு உளுந்து, பச்சைமிளகாய், சௌசௌ போட்டு கடைசியில் தேங்காய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கி ஆறியவுடன் நறநற வென்று அரைத்து எடுக்கவும்.


இது தோலுடன் செய்யக் கூடியதால் உடம்புக்கு ரொம்ப நல்லது. நிறைய நார் சத்து உள்ளது.
சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். தோலோடு செய்தால் தான் நல்ல டேஸ்ட்

மேலும் சில குறிப்புகள்