உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ஆப்பிள் ஸ்ரீகண்ட்

 

இது குழந்தைக்ளுக்கு பிடித்தது. இது டெசர்டா குழந்தைகளுக்கு குடுக்கலாம்.

தேவையானப் பொருட்கள்

  • ஆப்பிள் ஸ்ரீகண்ட்
  • கெட்டி தயிர் - 1 கப்
  • ஆப்பிள்,வாழைபழம் - 1 கப்
  • சர்க்கரை - 1/2 கப்
  • ஏலப்பொடி - 1/4 தே.க
  • பால் - 2 தே.க
  • கிஸ்மிஸ் - 4

செய்முறை

  • தயிரை நல்ல சீஸ் துணியில் ஊற்றி கட்டி
  • வைக்கவும் .தண்ணிர் எல்லாம் நன்றாக வடிந்த பிறகு
  • ஒரு கிண்த்தில் போட்டு அதில் சர்க்கரை சேர்த்து
  • கட் செய்த்த் ஆப்பிள்,வாழை பழம், கிஸ்மிஸ் ஏலபொடி
  • போட்டு நன்கு கலந்து ப்ரிட்ஜில் வைத்து குழந்தைகளுக்கும்
  • பூரி, சப்பாத்தி,பராத்தாவுடன் தொட்டுகொள்ள குடுங்கள்.
  • இதில் உங்களுக்கு பிடித்த எந்த பழம் வேண்டுமானலும் சேர்க்கலாம்.

குறிப்பு:

இது வட இந்தியாவில் சப்பாதிக்கு தொட்டுகொள்ள கூடியது திடிர் விருந்தாளிக்கு டெசர்டா கூட குடுக்கலாம்.

வழங்கியவர்

விஜி

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 10 10
  random food image


comments
ஹாய் விஜி
மே 15, 2008 - 7:55pm - வழங்கியவர் Mahalakshmiprag...

ஹாய் விஜி
1.இதில் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் எழுதி இருக்கிறீங்க "ஆப்பிள் ஸ்ரீகண்ட்
கெட்டி தயிர் - 1 கப்" என்று அப்படி என்றால் என்னது தனியா கட்டி தயிர் தெரியும்,இது தெரியவில்லை.
2.அதே போல் சீஸ் துணி என்றால் ,காட்டன் துணியா?
என் 1 1/2 வயது மகன் சப்பாத்திக்கு தயிர் விட்டு தான் சாப்பிடுவான் ,இந்த ரெசிப்பியில் பழங்கள் இருப்பாதால் நன்றாக இருப்பாதால் கொடுத்துப்பார்க்கலாம் என்று இருக்கிறேன்
3.பதில் தரவும்.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா
மே 16, 2008 - 9:02am - வழங்கியவர் Vijitvm

ஹாய் மஹா நன்றி

அது வேறொன்றும் இல்லை நல்ல கட்டி தயிர் தான் கெட்டி தயிர் என்றும் சொல்வார்கள்.
நிங்க சொலவது தான் சரி கட்டிதயிர்
கடையில் டப்பாவில் கூட கிடைக்கும் அல்லது வீட்டிலே full fat milk தயிரில் செய்தால் நன்றாக இருக்கும்.

செய்து பார்த்து சொல்லுங்க.

நன்றி

மஹா

SUPER!!!!!!!!!!!!!!!!!!!!!!
மே 24, 2008 - 1:36am - வழங்கியவர் Mahalakshmiprag...

ஹாய் விஜி

எப்படியிருக்கிறீங்க? வீட்டில் எல்லாரும் எப்படி இருக்கிறாங்க நான் இன்று வீட்டில் ஆப்பிள் ஸ்ரீகண்ட் செய்தேன்.போட்டோவும் எடுத்துவைத்துள்ளேன்.எப்படி அனுப்ப தெரியவில்லை.என் பொடிசு யுவனுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.லஞ்சு சாப்பிடாமல் இதைதான் சாப்பிட்டான்.என்னோட ஹஸ்பண்ட்டுக்கும் இஷ்டப்பட்டது.இதில் ஸ்பஷலே ஏலக்காய் தூள்.......ஒரு வாசம் வாவ்,நான் நாளைக்கி மாம்பழம்பழத்தில் செய்துபார்க்கப்போறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஆப்பிள் ஸ்ரீகண்ட்
மே 24, 2008 - 7:05am - வழங்கியவர் Vijitvm

ரொம்ப நன்றி மஹா.

ஆமாம் இது நார்மலா எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிக்ஷ்ர்ஸை அப்பிடியே நிங்க அட்மினுக்கு அனுப்ப வேண்டியதுதான். அதில் மென்ஷ்ன் பன்னுங்க இது விஜி யில் ஸ்ரீகண்ட் என்று. தட்ஸ் ஆல். அதில் அட்மினினின் மெயில் ஐடி இருக்கும் நிணக்கிறென். அதற்க்கு அப்பிடியே மெயில் போடுங்க. நன்றி.

ஆமாம் இதில் நிங்க விருப்ப்பட்ட பழங்கள் சேர்த்துகொள்ளலாம். பப்பாளி,அன்னாசி,கேண்டலுப்,ஹனில
ுப், பேரிக்காய்,மாம்பழம் ரொம்ப டேஸ்டா இருக்கும்.
எங்க வீட்ல் கொஞ்சம் மீதி இருக்காது.

ஆப்பிள் ஸ்ரீகண்ட்
ஜூன் 24, 2008 - 12:18pm - வழங்கியவர் admin

திருமதி. மஹாலெட்சுமி பிரகதீஸ்வரன் அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த ஆப்பிள் ஸ்ரீகண்ட்ன் படம்

apple srikand

ஆப்பிள் ஸ்ரீகண்ட்
ஜூன் 27, 2008 - 7:33am - வழங்கியவர் Vijitvm

நன்ற் மஹா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை விட நிங்க படம் எடுத்து எல்லாருக்கும் பார்க்க ஒரு வாய்ப்பு குடுத்தது. நன்றி.

நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன்.
ஒ.கே வா.