தட்டை

தேதி: May 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

பச்சரிசி மாவு -- 4 பங்கு
பொட்டுக்கடலை மாவு -- 1 பங்கு
பூண்டு -- 5 பல் (நசுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு (பொடியாக நறுக்கி வெறும் வாணலியில் போட்டு வறுத்தது)
பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் (கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தது)
கடலை பருப்பு -- 1 ஸ்பூன் (ஊற வைத்தது)
மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
வெண்ணைய் -- 1 ஸ்பூன்
சோடா மாவு -- 2 சிட்டிகை


 

மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் கலந்து பிசைந்து, தேவையெனில் தண்ணீர் தெளித்து வைக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கையால் தட்டி தட்டி வட்டமாக இட்டு காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான தட்டை ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

Subha (Akkaa/Amma vannu theriyala,)
Plz tell me whether we can make this without addoing soda.
Thanks,
Selvi.

Valha Vaiyaham ! Valha Valamudan !

சோடா இல்லாம கூட செய்யலாம்.ஆனால் பொறபொறப்பு குறைவா இருக்கும்.

vazhga v
சுபா அவர்களுக்கு தட்டை அருமையா க இருந்தது. ஆனால் எல்லாபொட்களை அரைத்து போடாலாம கொஞ்சம் மிளகு போட்டால் நல்லா இருக்குமா.

நன்றிalamudan

vazhga valamudan

அன்புள்ள sudgopkir,

தட்டை குறிப்பை செய்து பார்த்ததிற்கு நன்றி.
எதையும் அரைத்து போடக்கூடாது.. அப்படியே தான் செய்ய வேண்டும்.
அரைத்து போட்டால் ருசி மாறிவிடும்.

எள் போடலாம்.. ஆனால் மிளகு சேர்ப்பதை பற்றி நம் சகோதரிகள் கூறுவார்கள்.

சதாலட்சுமி
தட்டை செய்தேன் அருமையாகவும் சுவையாக இருந்தது. நன்றி

சதாலட்சுமி

உங்களின் இந்த குறிப்பை செய்தேன். சூப்பராக இருந்தது. என் கணவருக்கு மிகவும் பிடித்து விட்டது. மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!