மாம்பழ பால்போளி

தேதி: May 16, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாம்பழம் 1,
பால் 3 கப்,
மைதா மாவு ஒரு கப்,
சர்க்கரை அரை கப்,
ஏலக்காய்தூள் கால் டீஸ்பூன்,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.


 

மாம்பழத்தில் கெட்டியான சாறு எடுத்துக்கொள்ளவும். பாலை 2 கப் அளவு வரும்வரை சுண்டக் காய்ச்சவும். பிறகு சுண்டியபாலில் சர்க்கரை, ஏலக்காய்தூள், மாம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்துவைத்துக் கொள்ளவும். மைதாவை கெட்டியாக கலந்து பூரிகளாக இட்டு பொரித்தெடுத்து, அவற்றை சிறிய துண்டுகளாக்கி பால் மாம்பழக் கலவையில் ஊறவைக்கவும்.
இந்த ஊறவைத்த போளி சாப்பிட சுவையுள்ளதாக இருக்கும்.
வேண்டுமானால் நம் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் முந்திரி, பாதாம் இவைகளை துருவி மேலே தூவினால் கூடுதல் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்