உருளைக்கிழங்கு பொரியல்

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 300 கிராம்
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - சிறிதளவு
நெய் - அரை தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக்கவும்.
உருளைக்கிழங்கில் உள்ள நீர் சுண்டும்வரை புரட்டவும். நீர் சுண்டியதும் உப்பு சிறிது சேர்த்துக் கிளறி கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியினை ஊற்றவும்.
பிறகு சாம்பார் பொடி 1 தேக்கரண்டி போட்டு நன்றாய் வெந்ததும், சிறிது நெய் விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்