மீன் துவட்டல்

தேதி: May 17, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் 200 கிராம் (அதிகம் முள் இல்லாத மீனாக இருந்தால் நல்லது)
மிளகாய் வற்றல் 10
தனியா 2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
புளி சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 50 கிராம்


 

1. மீனை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.

2. மிளகாய் வற்றல், தனியா, மிளகு, உப்பு இவைகளை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

3. அரைத்த மசாலாவுடன் சிறிது புளியை கட்டியாக கரைத்து ஊற்றவும்.

4. மஞ்சள் பொடியையும் போடவும்.

5. இக்கலவையுடன் மீன் துண்டுகளை போட்டு அடுப்பை நிதானமாக எரிய விடவும்.

6. மீன் சிறிது வெந்தவுடன் இக்கலவையுடன் எண்ணெய் ஊற்றவும்.

7. சற்று கிளறிய பின், மீன் நன்றாக வெந்துள்ளதா என்று பார்த்து, இறக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்