மீன் கட்லட்

தேதி: May 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

அறுசுவையில் குறிப்புகள் வழங்கி வரும் இலங்கைத் தமிழரான திருமதி. அதிரா அவர்கள், மற்றொரு உறுப்பினரான திருமதி. ஜலிலா அவர்கள் கூட்டாஞ்சோறு பகுதியில் வழங்கியுள்ள குறிப்பினை பார்த்து சில மாற்றங்களுடன் இந்த சுவையான மீன் கட்லெட்டினை அறுசுவை நேயர்களுக்கு செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பாருங்கள்.

 

டின் மீன் - 1 (425g)(mackerel fish நல்லது)
உருளைக்கிழங்கு - 250-300 கிராம்
தக்காளி - 50 கிராம்
காரட் - ஒன்று
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - இரண்டு
கறித்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எலுமிச்சை - பாதி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
முட்டை - 2
பிரெட் கிரெம்ஸ் பவுடர் - 100கிராம் (golden breadcrumbs நல்லது)
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
டின் மீனை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும், உருளைக்கிழங்கை ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு அவித்து எடுத்து, தோல் உரித்து உதிர்த்துக்கொள்ளவும். காரட்டை துருவிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை பொடியாக அரிந்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, மீன், ஒரு தேக்கரண்டி உப்பு, கறித்தூள், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு குறைந்த தீயில் வதக்கவும்.
சிறிது வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காரட் போட்டு பிரட்டவும்.
பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, கரம் மசாலா தூள் போட்டுப் பிரட்டி இறக்கி வைத்து அதில் எலுமிச்சை/தேசிக்காய் பிழிந்துவிட்டுப் பிரட்டவும். அதிகநேரம் அடுப்பில் வைக்கத் தேவையில்லை. பச்சை மணம் போக வாட்டினால் போதும்.
பின்னர் இவற்றை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டிக்கொள்ளவும்.
இப்போது முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மிளகுதூள் போட்டு மெதுவாக அடித்து கலக்கவும். அதில் தட்டிய உருண்டைகளைப் பிரட்டி, பின் பிரெட் கிரெம்ஸ்சில் பிரட்டி எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் கட்லெட்களை போட்டு, குறைந்த நெருப்பில் வேகவைத்து, மெதுவாகத் திருப்பி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இதோ சுவையான மீன் கட்லட் தயார்.

முட்டையுடன் ஒரு தேக்கரண்டி சோளமாவு அல்லது ஏதாவது மாவு சேர்த்தால், இலகுவாக உருண்டைகளில் ஒட்டிக்கொள்ளும். கட்லெட்களாக தட்டிய உடன் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். நீண்ட நேரம் வைத்திருந்து பொரித்தால் கட்லெட் வெடிப்புவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் அதிரா மீன் கட்லெட்டை நல்லாவே அசத்தி இருக்கீங்க.
என்னடாது அதிரா சொல்லி ரொம்ப நாள் ஆகியும் கட்லெட் போட்டோ வெளி வர வில்லையே என்று அட்மின் மேல் கோபமா இருந்தது.
அட்மினுக்கு இன்னும் உம்ரா பதிவினால் பிரச்சனை யான கோபம் தீரவில்லை போல இருக்குன்னு நினைத்தேன்.
//என் நெஞ்சிலும் ஈரம் இருக்கு என்று தெரிவித்துள்ளார்.//ரொம்ப நன்றி.

என் குறிப்பிலிருந்து இதை எடுத்து செய்து காட்டிய அதிராவிற்கும், அதை போட்ட அட்மினுக்கு ரொம்ப நன்றி.

ம்ம்ம் அடுத்து என்ன எல்லாம் மீன் கட்லெட் செய்து அசத்துங்கள்

ஜலீலா

வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.

Jaleelakamal

ஜலீலாக்கா எதோ புதுபடம் ரிலீஸ் போலிருக்குன்னு வந்து பாத்தேன்..அப்டி எப்ப அட்மின் சொன்னார்?
மீன் கட்லெட்டை நீட்டா அதிரா செஞ்சு காமிச்சாச்சு

அதிரா அக்கா,

கறித்தூள் என்றால் என்ன?அதில் என்னென்ன பொருட்கள் சேர்ந்திருக்கும்.நன்றி.

நிருபமா.

ஹாய் அதிரா ..
நான் இத்தனை அப்படியே சிக்கன் வைத்து செய்தேன் ..
செய்து முடிப்பதற்குள் எல்லாம் தீர்ந்து போனது ..
உங்களுடைய விளக்கமான படங்கள் அருமை .

என் சிறிய சந்தேகம் .. இதுவரை நான் கட்லெட் செய்தது இல்லை .
கட்லெட் போன்று உருட்டிய பிறகு முட்டைல்யில் தோய்த்து .. பின் பிரெட் தூளில் நனைத்த பிறகும் என் கட்லெட் கட்டியாக இல்லை ..பிளவுடன் இருந்தது .. அது ஏன் ?? நான் செய்த தவறு என்ன ??

பிளவு இருத்தால் தோசை கல்லில் சுட்டேன் .

டியர் பாலம்மு கலவை கொஞ்சம் கூட தண்ணீர் இருக்க கூடது.
பிறகு எல்லாம் முடித்ததும் அதை ஒரு மணி நேரம் பீரீஜலில் வைத்து கொள்ளுங்கள்.பிறகு எடுத்து பொரித்து பாருங்கள்.பிறகு எடுத்து மறுபடியும் ஷேப் பண்ணினால் இன்னும் நல்ல வரும்.

இன்று மதியம் fish கட்லெட் தான்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா, தளிகா, நிருபமா, பாலம்மு அனைவருக்கும் நன்றி.

நிருபமா, கறித்தூள் என்றால் இலங்கை தலைப்பில் பாருங்கள் சகோதரி நர்மதா எழுதியிருக்கிறார்கள். நாங்கள் கறித்தூள் தான் பாவிப்போம். தனித்தனியாக தூள் சேர்ப்பதில்லை. இதற்குப் பதில் நீங்கள் மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்க்கலாம்.

பாலம்மு, மீன், கிழங்கு இரண்டும் நன்கு கட்டி இல்லாதவாறு தூளாகப் பிசைந்திருக்க வேண்டும். மற்றும் வெங்காயம் மிளகாய் எல்லாம் மிகவும் சிறியதாக அரிய வேண்டும். உருண்டைகளை உள்ளங் கையில் எடுத்து நன்கு இறுக்கி உருட்ட வேண்டும். பின் முட்டையில் தோய்த்து பிரட் கிரம்ஸ்ஸில் பிரட்டி மீண்டும் நன்கு உள்ளங்கையில் வைத்து உருட்ட வேண்டும். காய்வதற்குள் பொரிக்க வேண்டும். நிறைய போட்டாலும் வெடிக்கும் எண்ணெயில் 5, 6 தான் ஒரு தடவை போடவேண்டும். அதாவது ஒன்றுடன் ஒன்று முட்டாது பொரிய வேண்டும். இவ்வளவையும் கடைப்பிடியுங்கள். சிக்கின் வைத்தும் செய்யலாம். அவித்த முட்டையை வெட்டி உள்ளே வைத்தும் செய்யலாம். ஜலீலாக்கா சொன்னதுபோல் பிரிச்சில் வைப்பதானால் உருண்டைகளை வைத்து எடுத்து பின் மீண்டும் பிரட் கிரம்ஸில் போட்டு உருட்டவும். நன்றி.

ஜலீலாக்கா இன்னுமா உம்ரா பற்றி நினைகிறீங்கள். அது உடனேயே எல்லோரும் மறந்தாச்சக்கா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,ஜலிலாக்கா சூப்பர்..எனக்கு மீன் கிடைப்பது ரேர் நேற்றுதான் கிடத்து இருக்கு அதில் தளிகா மீன் பிரியாணி பண்ன இருக்கேன்..அடுத்து மீன் வாங்கியதும் இதை டிரை பண்ணனும் இன்ஷஅல்லாஹ்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா மீன் கிடைக்காத எந்த சென்னையில் மூலையில் இருக்கீங்க.எனக்கென்னவோ உங்களுக்கறியாம எங்காவது பக்கத்தில் கிடைக்காமல் இருக்காதுன்னு தோனுது.என்ன மீனால் செய்ய போறிங்க

ஆமாப்பா பக்கத்தில் ஒரு மார்கெட்டும் கிடையாதுப்பா ஏற்கனவே இருந்த மார்கெட்டையும் குலோஸ் பண்ணிட்டாங்க..அதுதான் எனகு எரிச்சல்..அதோட கொஞ்சம் தூரம் போனா ரோட்டில் மீன் விற்கிறாங்களாம்..எனக்கு ரோட்டில் விற்பவர்களிடம் பேச பயம் ஹா ஹா கண்டபடி பேசிட்டா அவ்லோதான்,அவங்களோடலாம் மல்லு கட்ட முடியாது அப்புறம் மூக்கை ரோட்டில் இருந்து எடுத்துட்டு வரனும்(னோஸ் கட்)அதும் இந்த சென்னையில் சொல்லவே வேணாம்..

இன்னும் அங்கு குறிப்பிட்ட டைம்தான் மீன் வரும் வராமலும் இருக்கும்..சின்ன மீனாதான் இருக்கு நாங்க சின்ன மீன் நெத்திலி தவிர வேறு மீன் பிடிக்காது...அபுறம் இவர் வேலை பிஸியில் என்னுடன் மார்கெட்டுலாம் வரமாட்டார் மார்கட் தூரத்தில் இருக்கும் அவ்லோ பொருமை இல்லை அவருக்கு சதா வேலை அலைச்சல் பாவமா இருக்கும்..அதனால்தான் சூப்ப்ர் மார்கெட்டோட சரி ...சீலா மீனில்தான் பண்ண் இருக்கேன்....உனிடம் கேட்கலாம்னுதான் நினைத்தேன்..நீ கொடுத்து இருக்கும் மீன் எனக்கு புரியல ரூபி இந்த மீன்தானா அதுவும்..??

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
நான் எப்பவும் ரின் மீனில்தான் செய்வேன். ஏனெனில் முள் பற்றிய பயம் இருக்காதல்லவா? தளிகா குறிப்பிட்டுள்ள மீன் கிங் பிஸ் அதாவது அறக்குளா, அதில் முள் குறைவு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அப்பா இன்று மீன் கட்லெட் சாப்பிட்டாசு, நீங்க பொரித்து வைத்திருப்பதை பார்த்ததும் உடனே செய்யனும் போல் இருந்தது.

மர்லியா நெத்திலி மீனா கவலை வேண்டாம் அதிலு செய்யலாம்.
என் நெத்திலி மீனை போட்ய் படிங்க, முள் இல்லாமால் கழுவும் விதம் சொல்லி இருக்கேன்.
அந்த மாதிரி கழுவி விட்டு அதை சுருட்டி அதில் செய்யுங்கள்.
நீங்களும் இன்றே சாப்பிடலாம்.

ஜலீலா

Jaleelakamal

சாப்பிட்டேன்,சாப்பிடுங்க ,சாபிடலாம்னு சொல்லுறீங்களே தவிர இருமா உனக்கு பண்ணித்தாறேன்னு வாய் வர மாடிக்குதேக்கா...இப்ப கைவசம் சீலா தான் இருக்கு ரூபி பிரியாணி பண்ணலாம்தானே?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹா...ஹா....ஹா..... மர்ழியா சூப்பர் பதில். ஜலீலாக்கா சாப்பிட்டாச்சா, அப்படியே மர்ழியாக்கும் அதோட எனக்கும் கொஞ்சம் அனுப்பிடுங்க. கட்லட் என்றால் யாருக்குமே அலுக்காது. பொரித்து முடிய பார்த்தால் எல்லாமே காலியாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அண்ட் ஜலீலா அக்கா மிக்க நன்றி ..
ஜலீலா அக்கா நீங்கள் கூறியது போல் பிரிட்ஜ் ல் வைத்து பொரித்தால் அதில் தண்ணீர் அதிகம் இருகதா ?? பிரிட்ஜ் ல் இருப்பதனால் மிகவும் கெட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன் ..எண்ணையில் பொரிக்கும் பொழுது அது வெடிகாதா??

அதிரா நீங்கள் கூறியது போல் தான் பொடி பொடி யாக தான் நறுக்கி உள்ளேன் .
இந்த கட்லேடை தோசை கலீல் சுடலாமா ?? சுவை மாறுமா ??

Your recipe is mouthwatering and the instructions are very clear and easy to follow.I am definitely going to do it soon.

Could you plz tell the measurement of carrot in grams for this recipe as it will be useful for me to do it.Thanks.

Clement

ஹாய் ,
நீங்கள் கேட்டதும் இப்ப அதே அளவு கரட் போட்டு நிறுத்துபார்த்தேன், 50- 75 வரை போடலாம். அதிகம் போட வேண்டாம். கிழங்கை நன்கு கரைய அவிக்க வேண்டாம். அவிந்தால் போதும்.

எந்த மீனில் செய்தாலும், ஒருதடவை மெதுவாக நீரைப் பிளிந்துவிட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள், அப்போது தண்ணித் தன்மை இருக்காது. செய்துவிட்டுச் சொல்லுங்கள். தக்காழியில் வரும் நீரையும் வெளியே கொட்டுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் கட்லெட்டுக்கு தக்காளி பயன்படுத்துவதில்லை..ஒருவேளை தக்காளி தான் தண்ணீர் போல வருகிறதோ என்னவோ.அது சேர்க்காமல் செய்யலாமா

Thanks for the reply.What is the tamil name for the fish "mackerel fish"? In which brand this tin fish box is available? Thanks in advance.

ஹாய் க்லெமென்ட்
மேக்கரெல் என்பது அயிலை மீன்..king fish,black pomfret,prawns போன்றவற்றிலும் செய்யலாம்

ஹாய் CLEMENT,
மக்கறல் மீன் சிவப்பு ரின்களில் கிடைக்கும். பொதுவாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் என நினைக்கிறேன். ரின்னில் GLENRYCK என்றும் பெயருள்ளது, ATLANTIC PILCHARDS IN BRINE OR IN TOMATO என இருக்கும். நான் பெரும்பாலும் in tomato என்பதைத்தான் வாங்குவேன், வாங்கினால் புறிம்பாக தக்காழி சேர்க்கத் தேவையில்லை. மெதுவாக பிளிந்துவிட்டுச் சேர்த்தால் சரி.

தளிகா, நான் எப்பவும், எனது கட்லட்க்கு தக்காழியுடனிருக்கும் மீன் வாங்குவதால் புறிம்பாக சேர்ப்பதில்லை, கரட்டும் சேர்ப்பதில்லை.(ஆனால் சேர்த்துப்பார்த்தால் சுவையில் வித்தியாசம் தெரிகிறது). இது ஜலீலாக்காவின் முறையில் செய்வதற்காகத்தான் சேர்த்தேன். சிலர் இவற்றுடன் கிறீன் பீஸும் சேர்ப்பார்கள். அத்துடன் நான் உருண்டைகளாகவே வைத்திருப்பேன் இப்படித் தட்டுவதில்லை.

பாலம்மு, கட்லட் பொரித்தால்தான் சுவையாக இருக்கும். தோசைக்கல்லில் வாட்டினால் மீன் மணம் இருக்குமென நினைக்கிறேன். அத்துடன் பச்சை மணம் வருமே. அப்படிச் செய்ய வேண்டாம். தட்டையாக தட்டுகிறபோது சிலவேளை பதம் பிழைத்தால் வெடிக்கலாம். அப்படியாயின் உருண்டைகளாகவே பொரியுங்கள். நிறைய பிறெட் கிரெம்ஸில் போட்டு உருட்ட வேண்டும். சும்மா பூசினாலும் வெடிக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Thanks athira madam for your clear reply.I will do it soon and give you the feedback.

I tried your cutlet today.The taste is awesome and very good and all cutlets are getting finished when we are preparing it only.Thanks for us sharing the very good recipe from your side.
Your clear instructions and exact measurements made us to do perfect.
Please post vegetable cutlet also soon when time permits for you.
Thanks again.

மிக்க நன்றி CLEMENT
என்னை விட ஜலீலாக்காவிற்குத்தான் இதில் பெருமை அதிகம். குறிப்பு அவவுடையது. செய்ததுதான் நான். ஆனால் ஒன்று தெரிகிறது, அட்மின் சொன்னதுபோல் கூட்டாஞ்சோறைவிட யாரும் சமைக்கலாம் பகுதியைத்தான் எல்லோரும் அதிகம் பார்க்கின்றனர். ஏனெனில் ஜலீலாக்காவின் குறிப்பு கூட்டாஞ்சோறில் இருந்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை, ஆனால் அதனை யாரும்சமைக்கலாமில் போட்டபோதுதான் செய்யும் ஆர்வம் வருகிறது.

கிளெமின்ட், உங்களுக்கு தமிழ் ரைப்பண்ணுவது தெரியவில்லை என நினைக்கிறேன். இங்கே கீழே எழுத்துதவி என இருக்கிறது அதனைக் கிளிக் பண்ணி வாசித்தாலே தமிழில் ரைப்பண்ணலாம். அப்போதுதான் உங்கள் பெயரை தமிழில் எப்படி எழுதுவதென்று தெரியும். மரக்கறியில் கட்லட் என்றால். மீனுக்குப் பதில் கிழங்கு போட்டு லீக்ஸ்சும் சேர்க்கலாம். நாங்கள் அது பற்றிஸ் என்றுதான் செய்வோம். முடிந்தால் முயற்சிக்கிறேன்.

இந்த மடம் எல்லாம் வேண்டாமே.... அக்கா போட்டாலே போதும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா மடம் (என்னமே இது உங்க பதிவில் பல மிஸ்டேக் அன்னைக்கு ஏதோ ஒரு திரட்டில் பார்த்தேன் ஒரே சிரிப்பு என் பயம் பத்வை போல இருந்தது ஆனைக்கும் அடி சரக்கும் அம்மனி மறக்காதீங்கோ இன்னும் வரலயா லைனில்?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

முதலில் இந்த மிக சுவையான குறிப்பினைத் தந்த ஜலீலா அக்காவிற்கும்,அதனை மிகத் தெளிவாக செய்து காட்டிய அதிரா அக்காவிற்கும்,இதனை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும் நன்றி.

அதிரா அக்கா,நீங்கள் படங்களில் செய்து காட்டி உள்ளதின்படியே செய்தேன்.என்னாலே நம்ப முடியவில்லை நான் தான் செய்தேனா என்று,அவ்வளவு சுவையாகவும்,உங்களுக்கு Finishing Stage ல் எப்படி கிடைத்திருக்கிறதோ அப்படியே எனக்கும் கிடைத்தது.என்னால் கட்லட் இனி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.தெளிவான அளவுகளுக்கும்,படங்களுக்கும்,விளக்கங்களுக்கும்,
சுவைமிகு ரெஸிபிக்கும் மிக்க நன்றி அதிரா அக்கா.

நிருபமா

ஹாய் அதிரா,நலமா,எனக்கு கட்லெட் என்றால்மிகவும்பிடிக்கும்,ஆனால்நான் சுத்த சைவம்.காரசாரமாய்சைவகட்லெட்பண்ணும்முறையைசொல்லுங்கள்.நான் வெஜ் எல்லாம் என்க்ணவருக்கும்,மகனுக்கும்தான்,நான் செய்துகொடுப்பதோடுசரி.ரெசிபி ரெடிபண்ணுங்க.
அன்புடன் விமலா.

சைவ கட்லெட்
டியர் விமலா வெஜ் கட்லெட்டும் என் குறிப்பில் இருக்கு அதை இதே முறையில் செய்யுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஓஹ் விமலா நீங்க பிராமிசா ? எனக்கு பிராமின்ஸ் வெஜ் ஐடம்லாம் ரொம்பவே பிடிக்கும் உங்க மெனு ஏதாவது இருக்கா இதில் ?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் சொன்னனா மர்லியா அருசுவைக்கு வாங்க உங்க துன்பம் பஞ்சா பறந்துடும் என்று, பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு,
Jaleela

Jaleelakamal

நிருபமா மீன் கட்லெட் சூப்பரா வந்துச்சா/
இப்ப என் ரெஸிபி எல்லாத்தையும் யாரும் சமைக்கலாமில் போட்டு விடலாம் போலைருக்கு..
சிக்கனிலும் , கீமாவிலும் இதே மாதிரி செய்து நோன்பு நேரத்தில் பிரீஜைல் 50 செய்து போட்டு வைத்து விடுவேன், டெய்லி வடை, பஜ்ஜி, போன்டா, பகோடா,சிக்கன் பஜ்ஜி இதேல்லாம் செய்வேன்.ஆனால் முடியாதபோது இந்த கட்லெட் கை கொடுக்கும் நோன்பு திறக்க 2 மணி நேரம் முன் எடுத்து வைத்து சூடா பொரித்து வைப்பேன் இதே மாதிரி , இனிப்பு சோமாஸி, க்கார சோமாஸி, சமோசாவும். செய்து பிரீஜரில் போட்டு விடுவேன்,
ரொம்ப சுலபமா இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

ஹலோ மர்லியா,நான் எழுதியதை சரியாகவே பார்க்கவில்லையா?நான்,மட்டும்தான்வெஜ்,மற்றவர்கள்நான்வெஜ்....
எனக்கும் பிராமின்ஸ் அயிட்டமெல்லாம் பிடிக்கும்...
நானும் நன்றாகவே சமைப்பென்,ஆனால்,நானேதும் மெனு கொடுக்கவில்லை..எழுதநேரமில்லை,இதுவரை.
இனிமேல் பார்ப்போம்..ஓ கேவா?
அன்புடன் விமலா.

ஹலோ..ஜலீலா,நான் உங்கள் குறிப்பில் தேடினேன்,காணவில்லையே...
ஆனாலும்,சொன்னதற்கு நன்றி.
அன்புடன் விமலா.

ஜலீலா அக்காவோட வெஜ் கட்லட் கீழே உள்ள லிங்க்கில் இருக்கு.

http://www.arusuvai.com/tamil/node/7262

நிருபமா

நன்றி நீரும்மா எனக்கு கொஞ்சம் அவசரம்ஜாஸ்தி,பொறுமைகூட கொஞ்சம் கம்மிதான்..ஹிஹி.அதுவும் டிபன்பண்ணும்பிஸியா இருந்தேனா..சுத்தம்...
நன்றிம்மா
அன்புடன் விமலா.

ஓஹ் அப்படியா அதை நான் கவனுக்கல..
பாவம் உங்களுக்காக நிருபமா எடுத்து தந்து இருக்காங்க நீங்க என்னன்னா நீரு மோருன்னு சொல்லுறீங்களே நியாயமா இது??மாலி என்ன பண்றாங்க ஒரு முறையாவது வர சொல்லுங்க ரொம்ப விசாரித்ததாக சொல்லிங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அக்கா ஆமா வந்தாச்சு மைண்ட் எவ்வலவோ தேவிஅல அருசுவை அரட்டை,சமையலுக்கு மட்டும் இல்லை கவலைக்கும் இதம் தரும் அருமையான தளம் பாபு அண்ணா ரொம்ப தேங்ஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஏதோ நீர் மோர் ரெஸிபியோன்னு நினச்சு திறந்தேன்... ஜலீலக்கா... கவலையே படாதீங்க.. இன்னும் ஒரு வாரம் .. என் கேமரா கண்டுபிடிச்சிட்டா ஒரே போட்டோ தான்...

தளிகா என்ன சவுண்டே காணோம்.... எல்லாரும் வாங்க.. கூட்டமா ஒரு கும்மி !!!
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அப்படியா நிருபமா.... மிக்க சந்தோசம். சொன்னபடியே செய்தால் பிழைக்காதுதான். இனிப் பாட்டியென்றால் கலக்கலாம்... கட்லற்ருடன்..

மர்ழியா..... என்னது அதிராமடமா?..... இருங்க வாறன்.....

அன்பு விமலா... நீங்க சைவமா? அப்ப சைவமும் சைவமும் தான் பேர்த்டே கொண்டாடினீங்களா?(ஜெ.மாமியைச் சொன்னேன்... அவவும் சைவம்தானே). அடுத்து சைவக் கறிகள்தான் செய்து கொடுக்கவுள்ளேன்... யாரும் சமைக்கலாம்மிற்கு....முயற்சிக்கிறேன். சைவ கட்லற் என்று நான் கேள்விப்பட்டதில்லை...(இப்பதான் பார்த்தேன் ஜலீலாக்கா கொடுத்திருக்கிறாவாம் இன்னும் படிக்கவில்லை) .... சைவ பற்றிஸ் தான் செய்வோம்... ஆனால் அந்த மா, பதமாக எடுக்க வேணும்.

ஜலீலாக்கா..... போதுமக்கா..... கொஞ்சம் சொன்னால் போதுமே... சாப்பாட்டுக்கூடையுடன் தான் வருவீங்க.... அப்படியே அடுக்கிற்றுப் போறீங்க....

அப்பப்பா... இந்த இலாவின் தொல்லை தாங்க முடியவில்லை.... என்ன கமெரா வை ஒழிச்சிட்டுத் தேடுறீங்களா?.... கட்டிலுக்குக் கீழ பாருங்க இருக்கும்.... அங்கதான் அஞ்சலியும் ஒழிச்சு வைப்பா......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மீன் கட்லெட்

என்ன நிருபமா எனக்காக எனக்கு சுலபமா நீங்களே எடுத்து கொடுத்தீர்கலா வித்யாவிற்கு
ரொம்ப நன்றி
ஜலீலா

Jaleelakamal

its very helpful to my learning stage

அதிரா tin fish nan use pannurathu illa. Fish market la fresh ah than vanguvom. Antha fish la mullu irukathu, so atha yepdi use pannanum, I mean direct ah உதிர்த்து vidanuma? Or boil panni உதிர்க்கனுமா?

Hard work never fails

அதிரா tin fish nan use pannurathu illa. Fish market la fresh ah than vanguvom. Antha fish la mullu irukathu, so atha yepdi use pannanum, I mean direct ah உதிர்த்து vidanuma? Or boil panni உதிர்க்கனுமா?

Hard work never fails

அதிரா வர முன்னால இமா பதில் சொல்லிட்டி ஓடிரப் போறேன். :-)

மீனை சுத்தம் செய்து, உப்பு & கொஞ்சம் மஞ்சள் போட்டு அவிச்சுட்டு பிறகு உதிர்த்துங்க.

‍- இமா க்றிஸ்