பால் பாயாசம்-2

தேதி: May 18, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி ஒரு கப்
பால் 4 கப்
சர்க்கரை 2 கப்
முந்திரிப்பருப்பு 10
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி


 

அரிசியை இரண்டு மேசைக் கரண்டி நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் நீரில் நன்றாக களைந்து, ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர், ஒரு
கப் பால் என்ற விகிதத்தில் ஒரு பாத்திரத்தில் பாலையும் நீரையும் கொதிக்க விடவும்.

பாலும், தண்ணீரும் கொதித்த பின் அரிசியைக் களைந்து போட்டு சீரானத் தீயில் வேக விடவும்.

பாலிலேயே அரிசி வெந்து நன்கு கரைய வேண்டும். அதற்காக அரிசி நன்கு வெந்தபின்,பாலை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் நன்றாக சுண்டியப் பிறகு தீயை முழுவதுமாகக் குறைத்து, அதில் சர்க்கரைச் சேர்க்கவும்.

சர்க்கரை சேர்த்தவுடன் தளர்ந்து விடும். தேவையெனில் மீண்டும் அடுப்பில் வைத்துக் கிளறலாம்

பிறகு ஏலப்பொடி போட்டு, முந்திரியை வறுத்துப் போடவும்.
கொதிக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.


மேலும் சில குறிப்புகள்