முட்டை குழம்பு

தேதி: May 18, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

முட்டை -- 4 என்னம் (வேகவைத்தது )
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 2 என்னம்
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (கொஞ்சம் பெரியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் -- 1 துண்டு
மிளகு -- 3/4 டீஸ்பூன்
சீரகம் -- 3/4 டீஸ்பூஞ்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பட்டை, கிராம்பு போடவும்.
பின் சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட வேண்டும்.

கொதிக்கும் போது அரைத்த விழுதை போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
இறக்கும் முன் வேகவைத்த முட்டையில் ஓட்டை உடைத்து பின் மேலே கீறி குழம்பில் போடவும்.
இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

This is Suresh from Taiwan... I am new for learning cooking.... I can't get ingredients what I want from Taiwan. But I can cook by what can get ^^....

This recipe is good and simple way.... I cooked it with what I have...... really nice taste..

Thank so much Mr / Mrs. Subha Jayaprakash for published.. ^^

Best wishes and continue your publish.. more and more.

கலோ சுபா ஜெயபிரகாஸ்! எப்படி இருக்கிங்க?
இன்று உங்கள் முட்டை குழம்பு செய்தேன் ரேஸ்ட் நன்றாய் இருந்தது. நன்றி
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.