அரைக்கீரை குழம்பு

தேதி: May 18, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்தது)
துவரம் பருப்பு -- 1/2 கப் (வேகவைத்தது)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
புளி -- கோலி அளவு (நீரில் கரைத்தது)
தாளிக்க:
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 3 என்னம்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

கீரையை அலசி அதனுடன் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து 1/2 கப் தண்ணீருடன் வேகவைக்கவும்.
5 நிமிடம் கழித்து சாம்பார் பொடி, புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் இறக்கி தண்ணீரை கொஞ்சம் இறுத்து வைத்து கீரையை நன்றாக கடையவும்(மசிக்கவும்).
பின் வேறு வாணலியில் எண்ணைய், கடுகு, உளுந்து தாளித்து மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு மசித்த கீரையை ஊற்றி ஒரு கொதி கொதித்ததும் வேகவைத்த பருப்பை போட்டு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
பருப்பு சேர்த்த அரைக்கீரை குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

அகத்தி கீரை குழம்பு எப்படி செய்வது?

அன்பு தோழி Snehithi,
அகத்தி கீரை குழம்பும் இவ்வாறே செய்யலாம்... என்ன கொஞ்சம் சிறு கசப்பாக இருக்கும்.. அதுவும் உடலுக்கு நல்லது குளிர்ச்சி...
செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்புங்கள்... எனக்கு இங்கே அகத்தி கீரை எல்லாம் கிடைக்காது.. பாலக், வெந்தயக்கீரையிலும் இதே குழம்பு செய்வேன் நன்றாக இருக்கும்...