கேழ்வரகு இனிப்பு ரொட்டி

தேதி: May 18, 2008

பரிமாறும் அளவு: இரண்டு குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - ஒரு டம்ளர்
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் டம்ளர்
வெல்லம் - அரை டம்ளர்
ஏலக்காய் - இரண்டு
உப்பு - ஒரு பின்ச்
நெய் - தேவையான அளவு


 

கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஏலக்காய் பொடித்து போட்டு தேங்காய் துருவலும் சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.
வெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டி மாவில் ஊற்றி ஒரு ஸ்பூன் நெய்யும் கலந்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
வெல்லதண்ணீர் போக மாவு பிசைய தேவைப்பட்டால் கூட தண்னீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேன்டும்.
பிறகு தோசை தவ்வாவை காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கை அளவு எடுத்து தட்டி இரண்டு பக்கமும் நெய் ஊற்றி சுட்டெடுக்க வேண்டும்.


இது குழந்தைகளுக்கு ஒரு ஹெல்தியான உணவாகும். சத்தும் அதிகம்.
கையால் தட்ட வராதவர்கள் ஒரு சதுர வடிவ ஈர துணியை நல்ல பிழிந்து அதில் வைத்து தட்டி போட்டும் சுடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Jaleela madam,

How r u? இப்பொழுது உங்கள் குறிப்பை பார்த்து ராகி ரொட்டி செய்தேன். ஆனால் தேங்காய் சேர்க்கவில்லை. நான் இரவு உணவிற்காக ஆபிஸ் எடுத்து செல்கிறேன். so i had doubt whether it will be good at night. Taste superb...thanks and clarify my doubt...if we add coconut will it be good at night or tommorrow....

Leelanandakumar.

Leela Nandakumar

thanks for your reply madam...Am cooking at afternoon and taking to office for same day dinner....now am clear...Thank you so much.

Leela Nandakumar

லீலா ராகி ரொட்டி செய்து பார்த்தது நல்ல இருந்தது குறித்து மிகவும் சந்தோஷம்.
ஒரு நாள் செய்து மறுநாள் இரவுக்கு கேட்கிறீங்கலா?
செய்து பிரிட்ஜில் வைத்து ஆபிஸ் கொண்டு போனீங்கனா ஒன்றூம் ஆகாது, சம்மர் என்றால் கெட்டு போக வாய்ப்பிருக்கு.

Jaleelakamal

ஹாய் ஜலீலா நலமா? உங்களுடன் இது தான் முதல் முறை பேசுகிறேன். இன்று இரவு கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.நான் இலங்கையில் இருக்கும் பொழுது இந்த ரொட்டி சாப்பிட்டது உண்டு.இங்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது இது சாப்பிடவில்லை.ஒரு மாதத்திற்கு முன்பு இக் குறிப்பைப் பார்த்து கேழ்வரகு மா வாங்கி வைத்திருந்தேன். இன்றுதான் செய்வதற்கு நேரம் வந்தது.அம்மா செய்து தந்ததுபோல் சுவையாக இருந்தது.மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அன்பின் ஜலீலா அக்கா, நான் வழக்கமா வாழைப்பழம் சேர்த்து அரிசிமா சேர்க்காதுதான் குரக்கன் ரொட்டி செய்வேன். இந்தமுறை உங்கட வாரம் எண்டதால உங்கட குறிப்பின்படி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. போன வெள்ளிக்கிழமையே செய்திட்டன். இண்டைக்குதான் பின்னூட்டம் போடுறன். மதியம் தக்காளி சாதம். இரவு இந்த ரொட்டி. வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா :)

டியர் வத்சலா கேழ்வரகு மாவு இனிப்பு ரொட்டி செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. அம்மா ஞாபகம் வந்து விட்டதா/
ஜலீலா

Jaleelakamal

டியர் நர்மதா மிக்க நன்றி என் குறிப்புகளை நீங்களும் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தது.
ஜலீலா

Jaleelakamal