அவல் உருண்டை

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - ஒரு கப்
சீனி - 1/2 கப்
நெய் - 3/4 கப்
அண்டிபருப்பு - 10 என்னம்
கிஸ்மிஸ்பழம் - 10 என்னம்
ஏலக்காய் - ஒன்று (தூள் செய்துக்கொள்ளவும்)


 

ஒரு வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு அதில் அவலை கொட்டி வறுக்கவும்
வறுத்த அவலை சிறிது நேரம் ஆறவைக்கவும்.
பின்னர் அவலையும், சீனியையும், தட்டிவைத்த ஏலக்காய்தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு தாளிப்பு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு அதில் அண்டிபருப்பு, கிஸ்மிஸ்பழம் போட்டு சிவக்க வறுத்து அரைத்த கலவையில் போட்டு கிளறவும்.
மீதி உள்ள நெய்யை சூடாக்கி அதை அவல் கலவையில் கொட்டி நன்றாக கிளறி விட்டு பின் கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
இந்த அவல் உருண்டையை காற்று போகாத டப்பாவில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டு போகாது, இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மஹா,
அவல் உருண்டை ('அண்டிபருப்பு' முந்திரிப் பருப்பு என்று நானாகவே தீர்மானம் செய்து கொண்டு :) ) செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது.
நான் நினைத்தது சரியா!!! :)

‍- இமா க்றிஸ்