சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

கேழ்வரகு - அரை கிலோ
சம்பா கோதுமை - 50 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
பாதம் - 50 கிராம்
ஜவ்வரிசி - 25 கிராம்
உடைத்த கடலை - 25 கிராம்


 

கேழ்வரகு, கோதுமை, அரிசி, உடைத்த கடலை, ஜவ்வரிசி எல்லாம் தனித்தனியாக லேசாக கை பொருக்கும் அளவுக்கு வறுத்து ஆற வைக்க வேண்டும்.
ஆறியதும் மெஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆற வைத்து ஒரு நல்ல ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்க வேண்டும்.


ஏர் உழும் விவசாயி வெரும் ஒரு கப் கேப்ப கஞ்சி குடித்துவிட்டு தான் நிலத்தை உழுகிறான். அவ்வளவு பெரிய நிலத்தை உழவே அது ஒரு சத்தான பானமாக இருக்கு, ஆனால் நீங்கள் இதில் இத்தனை பொருள் சேர்ப்பதால் இன்னும் கூடுதல் தெம்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை குடிக்கலாம். வேலைக்கு போகிறவர்கள் இது நல்ல கெட்டியாக காய்ச்சி இரண்டு கப் குடித்து விட்டு போகலாம். நல்ல பசி தாங்கும்.
டெய்லி ஒரு மேசைக்கரண்டி எடுத்து 1 1/2 கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சக்கரை, ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் நல்ல சத்தான பானம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் விஜி
பாதம் , இதையும் பாருங்கள்./

ஜலீலா

Jaleelakamal

இப்போ தான் பார்த்தேன், ஜலீலாக்கா. எங்க!!!..., என் பையனை வெச்சிட்டு, இப்பொ தான் சேட்டை எல்லாம் ஆரம்பம் ஆகுது,ஒரு வேலையும் ஆக மாட்டேங்குது!!சீக்கிரமே மாவு ரெடி செய்து பார்த்து விட்டு, உங்களுக்கு பின்னூட்டம் செய்யறேன்.
அன்புடன்,
விஜி

ஜலீலாக்கா
1.சம்பா கோதுமை என்றால், நாம் தினமும் உபயோகிக்கும் கோதுமை தானா? கோதுமை மாவாக சேர்த்துக்கொள்ளலாமா?
2.Dry corn (மக்காச்சோளம்)சேர்க்கலாமா?
3.உடைத்த கடலைன்னா பொட்டுகடலையா?
4.ரவை,Oats இன்னும் வேற என்ன என்ன சேர்க்கலாம்னு சொல்லுங்க,எது எல்லாம் கிடைக்குதுன்னு பார்க்கறேன்
எல்லா பொருட்களையும் கப் அளவில் சொல்றீங்கலா அக்கா?

SIVAKAVI
ஜவ்வரிசி எதற்காக? அதில் என்ன சத்து உள்ளது? இன்னும் வேறு என்னென்ன சேர்க்கலாம்? சக்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
என் மகள் (3 1/2) குழந்தையாக இருக்கும் போது நன்றாக சத்துமாவு நன்றாக சாப்பிட்டாள்.இப்போது அதை பார்த்தாலே ஓடுகிறாள். அவள் எப்படி சாப்பிட வைப்பது?
மேலும் இதைச் சாப்பிட்டால் motin tight aha போகிறது. தயிர் சேர்த்துகொடு என்கிறார்கள்,இது சரியா? பதில் தருவீர்களா?
kavitha.

anbe sivam

டியர் விஜி ராம் சம்பா கோதுமை வேறு, சாதாரண கோதுமை வேறு, கிடைக்காவிட்டால் சாதாரண கோதுமை மாவையே கலந்து கொள்ளலாம்.
மக்கா சோளம் தெரியல நான் கலந்தது இல்லை. அது சேர்த்தால் நல்ல கெட்டியாக வரும்.
உடத்த கடலை என்றால் பொட்டு கடலைதான். குழந்தை களுக்கு புஷ்டியை கொடுக்கௌம்.
கப் அளவில் கொடுக்கிறேன். நாங்க எல்லார் வீட்டிலும் பச்ச குழந்தைகலுக்கு ஒரே வயது அப்போது மொத்தமா கிலோ கணக்கில் திரித்து ஜலித்து எல்லோரும் பிரித்து கொள்வோம்.
ஆனால் இங்கு வந்ததும் ராகிமாவுடன், நானே எல்லாத்தையும் மிக்சியில் பொடித்து கலந்து கொள்வேன்.
ஜலீலா

Jaleelakamal

கவிதா தாறாளமாக சர்க்கரை வியாதி, பிரெஷர் உள்ளவர்கல் சாப்பிடலாம் இது காலையில் ஒரு டம்ளர் குடித்தால் நல்ல பசி தாங்கும். 7 மணியிலிருந்து 11 மனி வரை பசி தாங்கும்.

ஜவ்வரிசி சேர்ப்பது நல்ல கஞ்சி சேர்ந்து வரும்.
உங்கள் குழந்தை இதை கண்டாலே ஓடுகிறால் என்றால் நல்ல வக்கனிஅயா காய்ச்சி கொடுக்கனும் அப்படியும் பிடிக்க வில்லை யா சப்பாத்தி தோசை என்று எதிலெல்லாம் கலக்க முடியுமோ அதில் கலந்து சுட்டு கொடுங்கள். புட்டு செய்யும் போது கூட கலந்து அவித்து கொடுக்கலாம். தயிருக்கு பதில் மோர் சேர்த்து காய்ச்சி கொடுங்கள். இது மால்யில் 5 மணிக்கு மேல் கொடுகக் வேண்டாம்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா சத்துமாவு கஞ்சி குழந்தைக்கு முயற்ச்சிப் போர் சாப்பிடலாம.....
பெரியவர்கல்லுக்கு, நடுத்தர வயது ஆகியோர் சாப்பிடலாமா...
கடையில் வாங்குவதில் என்ன என்ன பொருகிரார்கள். அதில் எள் போடுவார்களா....

கடையில் வாங்ககும் சத்துமாவில் என்ன என்ன போடுவார்க்கல் விளக்கமுடியுமா.please.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா ராகி என்னும்( கேழ்வரகு) பீபி, சுகர், கொலஸ்ராயில் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்ல டிஷ் குழந்தைகளுக்காக தான் உடைத்த கடலை லூஸ் மோஷன் ஆனால் அதை கட்டு படுத்தும்.

பெரியவர்கள் தாராளமாக இதை சாப்பிடலாம்,
கட்டியாக கூழ் மாஅதிரியோ அல்லது தண்ணிய டீ மாதிரியோ செய்து சாப்ப்டலாம்.
பழைய ராகி மாவை (மக்கி போனது) பயன் படுத்தவேண்டாம் அதற்Kஉ பிறகு ராகி குடிக்கும் ஆசையே போய் விடும்.
கடையில் விற்கு சத்து மாவில் அட்டையிலேயே போட்டு இருப்பார்கள் என்ன என்ன சேர்த்து இருக்கிறார்கள் என்று, அதை பார்க்கவும்.

ஜலீலா

Jaleelakamal