கருவாட்டு குழம்பு -- நெத்திலி மீன்

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெத்திலி கருவாடு -- 15 என்னம் (மண்டையை பிய்த்துவிட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்)
சின்ன வெங்காயம் -- 3/4 கப் (வட்டமாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (பொடிதாக நறுக்கியது)
புளி -- கொலியளவு (கரைத்தது)
சாமபார் பொடி -- 1 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
வெந்தயப்பொடி -- 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -- 1/4 டீஸ்பூன்


 

ஊற வைத்த கருவாடு உடன் உப்பு சேர்த்து மண் போகும் வரை நன்கு கழுவவும்.
வாணலியில் எண்ணைய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி போட்டு அதனுடன் கருவாடையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி தே.அ உப்பு சேர்த்து சாம்பார் பொடி போட்டு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பின் ஒரு கொதி கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றி 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி கொதித்து எண்ணைய் மேலே மிதந்து வரும் வரையும் கருவாடு வெந்து வரும் வரையும் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான நெத்திலி மீன் கருவாட்டு குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi,
hows u? ur recipe is very simple and easy to prepare.today im goin to do this.thank you.

Priya Benjamin