சோள ரவை உப்புமா

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோள ரவை - 2 கப்
தண்ணீர் - 3 கப்
வரமிளகாய் - 2
கடுகு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பொடிதாக நறுக்கியது - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போடவும், கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி அதில் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கிளறவும்.
அதன் பின்பு அதில் சோள ரவையை போட்டு வாசனை வரும் வரை கிளறி தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கிளறி மூடி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் புழுங்க வைக்கவும். வெந்ததை சரி பார்த்து இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ரசியா! இந்த சோளரவை உப்புமா செய்தேன். உண்மையில் எனக்கு இப்படியும் ஒரு ரவை இருப்பது தெரியாது. இங்கே கிடைக்குமோ தெரியவில்லை. செமோலினா என்றுதான் பொதுவாக இருக்கும் வாங்குவேன். என்னிடம் இருந்த ரவையில் சோளன் சேர்த்து உங்கள் முறைப்படி செய்தேன் நன்றாக இருந்தது. ப. மிளகாய்க்குப் பதில் செத்தல் சேர்த்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இங்கு சோள ரவை கிடைக்கும்!சிறிது மஞ்சள் நிறமாக இருக்கும் நல்ல வாசனைய்யுடன் இருக்கும்,இதில் வடை கூட செய்யலாம்,செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி அதிரா!!

ரஸியா எப்படி இருக்கிறீர்கள் பிள்ளைகள் அண்ணன் அனைவரும் நலமா போனில் பேசி நாளாகிவிட்டது நான் சோள ரவை உப்புமா செய்தேன் நான் இதுவரை சோள ரவையில் கூழ்தான் செய்து இருக்கிறேன் இதுவும் நன்றாக இருந்தது

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நல்லா இருக்கோம்,உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா?சோள ரவை உப்புமா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி ஜுலைஹா!

உங்கள் பின்னூட்டதிர்க்கு ரொம்ப நன்றி அக்கா!இதில் கேசரி கூட செய்வீர்களா?ஒருமுறை நானும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த சோள ரவை உப்புமாவின் படம்

<img src="files/pictures/aa270.jpg" alt="picture" />

அதிரா,படம் எடுத்து அசத்திகொண்டு இருக்கிறீர்கள்.
படத்தை பார்க்கும் போதே செய்ய தூண்டுவது போல் இருக்கிறது!ரொம்ப நன்றிமா!அட்மின் அவர்களுக்கும் நன்றி!

ரசியா,
1. இதற்கு சோளரவையை ஊற வைக்க வேண்டியது இல்லையா?
2. ரவை வித்தியாசமான அளவில் விற்கிறார்களே! இதற்கு எப்படி இருந்தால் நல்லது?

‍- இமா க்றிஸ்

ரஸியா நான் சோள ரவையில் கேசரி செய்து இருக்கிறேன். உப்புமாவும் மிகவும் நன்றாக உள்ளது. விரும்பி சாப்பிட்டோம்.

அதிரா, corn meal, corn grits என்ற பெயரில் கடையில் கிடைக்கும். பாருங்கள்.