சாசேஜ்(sausage) சீஸ் ப்ரெட் டோஸ்ட்

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாசேஜ்(sausage) - 6
ப்ரெட் - 6
துருவிய சீஸ் - 100 கிராம்
முட்டை - ஒன்று
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

முதலில் முட்டையை நன்றாக கலக்கி அதில் துருவிய சீஸை போட்டு கலந்து வைக்கவும்
பிறகு ஒரு நாண் ஸ்டிக் தவாவை அடுப்பில் ஏற்றி தீயை மிதமாக வைக்கவும்
அதன் பின்பு ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், அதில் ஒரு ப்ரெட் துண்டங்களை நனைத்து இரண்டு உள்ளங்கையால் அழுத்தி தண்ணீரை பிழிந்து ஒரு தட்டில் வைக்கவும்.
பின்பு அதில் ஒரு சாசேஜ் (sausage) வைத்து அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி சீஸ் கலவையை வைத்து ப்ரெட்டை மடக்கி மூடவும்.
பிறகு தவாவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர் விட்டு அதில் இந்த ப்ரெட்டை போட்டு பொன்னிறமானவுடன் திருப்பி போட்டு எடுக்கவும்.


இது காலை மாலை சிற்றுண்டிக்கு பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாம்,விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரஸியா சீஸ் முட்டையோடு கலக்கி சுடும் போது தவ்வாவில் ஒட்டி கொள்ளாதா?

ஜலீலா

Jaleelakamal

நலமாக இருகீங்களா?
சீஸும் முட்டையையும் நாம் வெளி பக்கம் வைக்க கூடாது உட்புறம் வைத்து இரண்டாக மடிக்கவும் ஆக உட்புறம் சீஸ் கலவை இருப்பதால் ஒட்டாது, முயர்ச்சி பண்ணி பாருங்க!

ரஸியா வா அலைக்கும் அஸ்ஸலாம்.
நான் கேட்பது முட்டையும் சீஸும் கலந்து தவ்வாவில் சுடும் போது தவ்வாவில் சீஸ் ஒட்டி கொள்ளாதா சொன்னா நாளைக்கே செய்து விடுவேன், சீஸ், சாசேஜ் எல்லாம் ரெடியா இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலக்கா ஒட்டாது வெளிபுறம் ப்ரெட் தான் இருக்கும் அதனால் நீங்கள் தைரியமாக முயற்ச்சி செய்யுங்கள்

டியர் மேடம் இதை படிக்கும் போதே சாப்படும்னு தோனுது ஆனால் sausage என்றால் என்ன?

please help me.

இதை தேட இயலாது சோ ஒரு பதிவை போட்டுட்டா தேவைபடுறப்ப உடனே எடுத்துகலாம் அதனால்தான் போட வந்தேன்..பிள்ளைக்குன்னு சொன்னாலே செய்து பார்த்துடனும் இல்லையா பார்த்துட்டு சொல்கிரேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க?மரியம் நலமா?சரிம்மா நம்ம ஊரில் sausage கிடைக்கிறதா?

நல்லா இருக்கேன் ரஸியா நீங்க நலமா ஆஹா என்னமா கிடைக்காதா? :-( நான் கடையில் கேட்கலாம்னு நினைத்தேன்..ஹும் பரவாயில்லை எனக்கும் சேர்ட்து நீங்க சாப்டுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

http://images.google.fr/images?q=sausage+image&hl=fr&rlz=1T4SHCN_frFR244FR244&pwst=1&um=1&ie=UTF-8&sa=X&oi=images&ct=title
நம் நாட்டில் இருப்பது எனக்கு தெரியவில்லை ஒருசமயம் சென்னையில் கிடைக்கலாம் நீங்கள் சென்னை வாசி உங்களுக்கு தெரிந்து இருக்கும் அதனால் தான் உங்கலிடம் கேட்டேன் கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள் மேலே குடுத்துலள்ள லின்க்கை க்ளிக் பண்ணூங்க படத்தை பார்க்கலாம் இல்லை என்றால் sausage image என்று கூகிளில் தேடுங்க படம் கிடைக்கும்

இவர்ட்ட கேட்டேன் இங்கு எல்லா சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்குமாம்..நான் இருக்கும் நிலையில் இப்ப செய்யதான் முடியல சீகிரமே செதுடறேன் இன்ஷஅல்லாஹ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

sausage இறைச்சியில் ஸ்பைசஸ் உப்பு எல்லாம் சேர்த்துவிரல் கனத்தில் ஒரு ஜான் நீளத்தில் இருக்கும் இது பல சைஸில் கிடைக்கும் பிள்ளைகல் விரும்பி சாப்பிடுவார்கள் இது சான்விட்ச் செய்வதர்க்கு ஏற்றது நான் இந்த குறிப்பை உங்களுக்காகவே படம் எடுத்து வைத்துள்ளேன் கூடிய விரைவில் அனுப்புகிறேன் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

ரொம்ப thanks ங்க

நான் நேற்று தான் [EGM] எமிரேட்ஸ் ஜென்ரல் மார்க்கெட் ல் sausage என்றால் என்ன? ன்னு
கேட்டேன் அவர்கள் சிக்கன் ஃபிராங்ஸ் ஐ தான் காட்டினார்கள். நான் அதையும் வங்கினேன். அதில் ஒரு 10 பீஸ் இருந்தது. ஆனால் மறுபடியும் ஒரு சந்தேகம். அதை அப்படியே சப்பிடுவதா இல்ல வேகவைத்து சப்பிடனுமான்னு தெரியல. அதுல Direction for use போடல.

ஆம்மாம் சசிக்கலா இதனை அப்படியே சாப்பிடலாம்
சிறிது எண்ணைவிட்டு பொறித்தும் சாப்பிடலாம் இதைவைத்து தான்(hotdog) ஹட்டாக் செய்கிறார்கள்

அப்படியே சாப்பிடலாம் ன்னு பார்தால் ஒரு மாதிரி மனசு ஒத்துகல.சோ நான் பொரிச்சே சாப்பிடலம்ன்னு நினைக்கிறேன். நான் செய்து பார்த்துட்டு சொல்லுகிறேன்