சிக்கன் க்ரேவி

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோழித் துண்டுகள் - 1/2 கிலோ
வெங்காயம் பெரியது - ஒன்று
ஏலம் - 6
கருவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டே கால் மேசைக்கரண்டி
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
ரம்பை இலை - சிறியது ஒன்று
கருவா - 1 சிறிய துண்டு
கிராம்பு - 3 அல்லது 4
தக்காளி பெரியது - 3
தேங்காய் சிறியது - பாதி மூடி
கசகசா, முந்திரி பேஸ்ட் - ஒரு 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - 2 அகப்பை(ஒரு சிறிய குழி அகப்பை அளவு)
நெய் - 2 அகப்பை
மசாலா பவுடர் - 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்(காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி


 

தக்காளியை சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். கோழி இறைச்சியை சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ரம்பையை கழுவி மூன்றாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய், கருவா, கிராம்பு இவையனைத்தையும் ஒரு கிண்ணத்தில் ஒன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் விடவும். பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அது பொன்னிறமானதும் கருவேப்பிலை, ரம்பை இலை போட்டு லேசா வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு, கருவா, தயிர், ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்த்து கலந்து வைத்துள்ளதை இதில் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு கலவை பச்சை வாடை நீங்கியதும் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் கோழிக் கறியை சேர்த்து இலேசாக பிரட்டிவிட்டு தீயை சிம்மில் வைத்து ஒரு 5 நிமிடம் வேக விடவும்.
கோழி இறைச்சி வெந்தவுடன் மசாலா பவுடரை அதனுடன் சேர்த்து பிரட்டவும். எடுத்து வைத்து இருக்கும் தேங்காய் பாலையும் அதில் ஊற்றவும்.
நன்கு கொதித்து வந்ததும் சிம்மில் வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.
ஓரளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கசகசா, முந்திரி கலவையை கொட்டவும். தீயை அதிக அளவில் வைக்க கூடாது. அப்படியே வேக விடவும்.
நன்கு வெந்ததும் எண்ணெய் வெளியே மிதக்கும். அந்த பதம் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூடான, சுவையான சிக்கன் கிரேவி ரெடி. இதனை சாதம், நெய்சோற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், இட்லி, தோசை அனைத்துடனும் சாப்பிடலாம்.
அறுசுவையில் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. மர்ழியா அவர்கள் நேயர்களுக்காக இந்த சிக்கன் க்ரேவியினை செய்து காட்டியுள்ளார்.

இந்த க்ரேவியில் கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்தும் செய்யலாம். அப்படி செய்வதென்றால் மீடியம் சைஸ் கத்தரிக்காய் 3 அல்லது ஒரு முருங்கைக்காயை நறுக்கிப் போட்டு செய்யவும். கோழி இறைச்சி முக்கால் பாகம் வெந்தவுடன் நறுக்கின காய்களை சேர்க்கவும். உருளைக்கிழங்கு என்றால் கோழி இறைச்சி சேர்த்த ஐந்து நிமிடத்தில் சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் அட்மின்,மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி போட சொல்லி மின்னஞ்சல் போட்டேன் பார்கலயா?அது வர வில்லையே....அடுத்து கத்திரிக்கா மீடியம் சைஸ் 3 போடனும்..முருங்கைக்காய் மட்டுமே 1 பிளீஸ் மாற்றிடவும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அட யாருப்பா இது இத நான் கவனிக்கலையே பந்தா பெண்ணு.

மர்லியா சூப்பரா இருக்கு பார்க்கவே.
மசாலா தூள் என்பது மிளகாய் தூளா?

ஜலீலா

Jaleelakamal

ஜலில்லாக்கா பாவாடை சட்டை இப்பதான் போட்டு இருக்கா எனக்கு ரொம்ப நாள் ஆசை போட்டு பார்கனும்னு,இப்பதான் தைத்து முடித்தேன்...இல்லை அதில் சொல்லி இருக்கும் மசாலாதூள் நாம் வீட்டில் பாண்ணுறது...

தனி அளவுன்னா:

தனி மிளகாய்தூள் -2 ஸ்பூன்
மல்லிதூள் -2 ஸ்பூன்
மஞ்சள் - 3/4 ஸ்பூன்
சோம்பு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்

போடனும் சூப்பரா வரும்..பிலாஸ் வைத்து எடுத்த படங்கள் கலர் புல்லா இல்லாமல் வெள்ளையா வந்து இருக்கு..தெரியாமல் எடுத்துட்டேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓ அப்படியா
மர்லியா ரொம்ப நல்ல இருக்கு, நானும் ஒரு காலத்தில் தையல் பைத்தியம் எந்த கடைக்கு போனாலும் ஒவ்வொன்னா எடுத்து பார்ப்பேன் எப்படி தைத்துஇருக்கிறார்கள். என்று.
இந்த வயதில் அடுக்கு கவுன் தையுங்கள் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
நான் என் நாத்தனார் பொண்ணு இரண்டு வயது இருந்தபோது தைத்து கொடுத்தேன் ச்சுப்பரா இருக்கும்.
பிளாக்கில், மயில் கலரில் ரொம்ப அருமையா இருந்தது

ஜலீலா

Jaleelakamal

மர்ழியா என் அம்மா இப்படியே தான் செய்வாங்க.நானும் தான்.ரொம்ப சின்ன வித்யாசம் தான்..இந்த குழம்பு ரொம்ப ருசியா இருக்கும் பரோட்டாவுக்கு///சிக்கனை விட பொண்ணு தான் நல்லா இருக்கா

இப்போதுதான் நேரம் கிடைத்தது. ஏன் நிறம் கறுப்பாக இருக்கிறது? கிரேவி தக்காழி சேர்கிறபோது சிவப்பாக அல்லவா இருக்க வேண்டும். மசாலா சேர்த்ததால் அப்படி இருக்கோ?

மகளுக்கு நல்லா டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறீங்க போல , இப்பவே மயக்கிறா கவனம். முந்திய படத்தை விட மெலிந்து விட்டமாதிரி தெரிகிறது. வெதர் மாற்றத்தாலோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்னடா அதிராவை இந்னேரம் காணொமேன்னு பார்த்தேன் தோ வந்தாச்சு..இல்லைப்பா இங்கு போட்டோ எடுக்கு டைம் பார்த்து லைட் லோ வால்டேஜ் அதோட அடுப்புக்கு பக்கத்தில் லைட் கிடையாது அதான் எல்லாம் மாறி,மாறி வந்து இருக்கு எனக்கே இப்ப படத்தை பார்த்துட்டு கஸ்டமாகிட்டு ரொம்ப கலர் புல்லா இருக்கும் இந்த கிரேவி...என் கண்வர்,பொண்ணுகெல்லாம் ரொம்ப பிடிக்கும்...எனக்குதான்..

படத்தில்தான் இப்படி இருக்கு நான் கொடுத்த கத்திரிக்கா மாங்காய் க்கு இது ரொம்ப சூப்பரா இருக்கும் அதுகாகதான் இதை கொடுத்தேன்..

இலா ஆமாம் அக்கா வாரதால கனவில் இருக்கேன் ஆமாம் இடையில் டெலிவரிக்குன்னு போனேனே அந்த அக்கதான் அந்த குட்டி தேவதை என் கண்ணுக்கு முன் நிற்குறா...அதோட என் அக்காவின் பொண்ணுங்க 3 பேரும் ரொம்ப உயிர் இப்ப அக்காவை விட பொண்ணுங்களைத்தான் தேடுது ஹா ஹா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா நேற்றே சொல்ல மறந்து விட்டேன்.

மட்டனில் எல்லா காயும் போடுவேன் (காளிபிளெவர்,கத்திரிக்காய், முருங்கக்காய்,உருளை,வெண்டைகாய்,கருனை கிழங்கு,முட்டை கோசு, கேரட்,) எல்லாம்.

நான் இதுவரை சிக்கனில் உருளை,முருங்கக்காய் தான் போட்டு செய்துள்ளேன்.

கத்திரிக்காய், மாங்காய் போட்ட நல்ல இருக்குமா. அப்ப கடைசியில் சேர்க்கனும் இல்லைஆ?

ஜலீலா

Jaleelakamal

மர்ழியா, நான் 'யாரும் சமைக்கலாமில்' எந்த குறிப்பு வந்தாலும் பார்ப்பேன். ஏன் தெரியுமா? நம் தோழியரின் முகம் காணத்தான். இன்று கொசுராக குட்டிப் பெண்ணைப்பார்த்தாச்சு. ஆயிரம் நவீன உடைகள் இருந்தாலும் நம்ப ட்ரெடிஷனல் உடைகளின் அழகு வரவே வராது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அக்கா நான் சொன்னது இதற்க்கு முந்தின குறிப்பு கொடுத்து இருந்த கத்திரிக்காய் மாங்காய் குறிப்பை சொன்னேன்..சிக்கனில் போட சொல்லல..நான் போட்டதும் இல்லை..ஆனால் கத்திருக்காய் போடலாம்..கத்திரிக்காய்,முருங்கை,உருளை ஒவ்வொன்றும் ஒவ்வொரு டேஸ்ட் கொடுக்கும்..சிக்கன் சீக்கிரமே வெந்து விடும் சோ உருளை கிழங்கை மட்டும் கிக்கனுடன் போட்டுடனும் ஆனால் கத்திரிக்காய்,முருங்கையால் போடுறத இருந்தால் சிக்கன் 3/4 வாசி வெந்ததும் போடனும்...நான் மட்டனில் உருளை,வாழைக்காய் போடுவேன் மற்றதெல்லாம் போட்டது இல்லை ஒவ்வொரு சமையலும் ஒவ்வொரு வகை :-D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா, நான் இன்று உங்களின் சிக்கன் க்ரேவி செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் அருமையாக இருந்தது. நாங்கள் இருவரும் விரும்பி சாப்பிட்டோம். உங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

ரொம்ப நன்றி..செய்து பார்த்து உடனே மின்னூட்டம் தந்தற்க்கு..ஆம் இது அனைத்து ரெஸிப்பிக்கும் பொருத்தமா இருக்கும்..மீண்டும் ஒருமுறை நன்றி :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓஹ் ஜெயந்திமாமி இப்போதான் உங்க பதிவை பார்த்தேன்..ரொம்ப சந்தோசம் என் பொண்ணை பாராட்டியமைக்கு...

கண்டிப்பாக மாமி நம்மூர்,புடவை,பாவடை சட்டைக்கு ஈடு ஏது?இவ பொறந்ததில் இருந்தே தைக்கனும்னு நினைத்தேன் இப்போதான் முடிந்தது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா உங்க பாப்பா செம க்யூட்! தூக்கி கொஞ்சலாம் போல இருக்கு!

ஹாய் மாலி ரொம்ப தேங்ஸ் எங்கு இருக்கீங்க இந்தியான்னா வாங்க வந்து கொஞ்சிட்டு போங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா....உங்கள் ரெசிபி சூப்பர்..இன்னும் 2 மாதங்களில் என் மகனின் முதல் birthday வருகிறது.
வெஜ் ரெசிபிஸ் எல்லாம் யோசித்து விட்டேன்.நான் வெஜ் க்ரேவி என்ன செய்யலாம் என்று
நினைத்து கொண்டு இருக்கும்போது உங்கள் ரெசிபி பார்த்து,செய்து பார்த்தும் விட்டேன்.ரொம்ப நல்லா இருந்தது.எங்கள் மெனுவில் உங்கள் சிக்கன் க்ரேவி இடம் பிடித்துவிட்டது.
நட்புடன் ப்ரியா.

ஹாய் சஞ்சு ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க பீ பேக் பார்த்ததும் ரொம்ப நன்றி ஓஹ் முதல் பிறந்தநாளா?ரொம்ப சந்தோசம்..எல்லாம் வலமும் பெற்று,நோய் இல்லாமல் வாழ்வில் உயர என் மனமார்ந்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன உங்க குறிப்பில் ஏதாவது எனக்காக வெஜ் கிடைக்குமா இல்லை என்றால் ஏதாவது படத்துடன் வெஞ் ரெசிப்பி குடுங்கப்பா. நான் வெஜ் இப்பதான் அடிக்க்டை படத்தோட வருது நிற்ய்ய.என்னை மாதிரி வெஜ்காரங்களாகவும் கொஞ்சம் போடுங்க . உங்க கத்த்ரி மாங்காய் பார்த்தேன் அடுத்த வாரம் அதுதான்.

இங்கு நல்ல பெரிய குண்டு கத்தரிகாய் கிடைக்கும். அதில் செய்யலாமா?

ஹாய் விஜி பண்னலாம் ஆனா இது நம்ம ஊர் கத்திரிக்காய் அளவு கொடுத்து இருக்கென் அதற்க்கு ஏற்றார்போல போட்டுகங்க அப்ப சரியா வரும் ஒகேவா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

விஜி இன்ஷஅல்லாஹ் முடிந்தால் தருகிறேன்..இது போட்டோ எடுத்து ஒரு 2,3 மாதம் இருக்கும்(திட்டாதீங்க :-) இப்பதான் அனுப்ப முடிந்தது அடுத்து எடுததா?கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும் ஹா ஹா என்ன பண்ண என் [பொண்ணை வைத்துட்டு முடியல

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hai marzhi...

thanks for your wishes
natpudan
priya

டியர் மேடம் ரம்பை இலை,கருவா
அப்படி என்றால் என்ன?

ரம்பை இலைன்னா பிரியாணி இலை போல ஒரு வகை இலை அது தாளிப்பில் அதிக வாசனை கொடுக்கும்...அது இல்லாமலும் பண்ணலாம்..

கருவா என்றால் கருவாபட்டை (பட்டை எனவும் சொல்லுவாங்க)என்போமே!அதுதான் இது..கிரேவியிம் ஆரம்ப படத்தில் கூட இருக்கு நீளமாக பாருங்கள்..நன்றிமா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இப்பதான் இதை பார்த்தேன். ரொம்ப நன்றிங்க.

இதும் என் குறிப்புதான் வீணா தேட வேண்டாம்னு எடுத்து போட்டுட்டேன் பாருங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பரீதா இதுதான் நீங்க கேட்ட சிக்கன் கிரேவி..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi marliya
i marliya how r u.......and how is that sweety.....i read all the instruction, i dont know what is
kaduva.......is it cinannam stick or paity in tamil........ramba illai means bay leaf in english.
thanks for ur immediate reply

cheers
fareeda

நல்மே நீங்க எங்கு இருகீங்க ச்ல்லுங்க அதோட தமிழில் எழுத டிரை பண்ணுங்களேன் நாம நேருக்கு நேர் பேசிக்குறாப்ல பீலிங்க் வரும்..அந்த சுவீட்டி என் வீட்டு சுட்டிதான் என்னோட பொண்னு அவ ஆட்டம்தான் தாங்கல :-) கருவான்னா cinnamon பரீதா ஓகே இவ லூட்டி ஆரம்பம் நெய் சோறுக்கு பதில் போட்டுட்டு ஓடனும்

அய்யோ அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi marliya

i tried in typing in tamil but i felt bit difficult
i will learn qucikly........thanks
keep in touch
bye

சாரி

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய்ய்மா நல்மா?இப்பதான் அருசுவை பக்கம் வந்தேன் ரொம்ப சந்தோசம் பர்ரீதா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இன்று இந்த குறிப்பை பார்த்து சிக்கன் கிரேவி செய்தேன்... மிகவும் சுவையாக இருந்தது...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)