கொள்ளு சாதம்

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கொள்ளு - ஒரு கப் (ரைஸ் குக்கர் கப்)
புழுங்கல் அரிசி - ஒரு கப்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
துருவிய பூண்டு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் (அ) வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் - அரை தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். பூண்டை துருவி வைக்கவும்
ரைஸ் குக்கர் சட்டியில் எண்ணெயை விட்டு அதில் பட்டை கிராம்பை போடவும்.
பிறகு துருவிய பூண்டை போட்டு வதக்கி அதில் 3 கப் தண்ணீர் விட்டு அதில் அரிசி, கொள்ளை கழுவி தண்ணீரில் போடவும்.
மேலும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரை ஆன் செய்யவும். வெந்தவுடன் கிளறி விடவும். விருப்பபட்டவர்கள் கடைசியில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு கிளறி பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெயிட்டை குறைக்கனும் என்று நினைப்பவர்கள், இதை சாப்பிடுங்கள், பார்த்து ரொம்ப சூடு, அதற்கு ஏற்றார்போல பழங்கள் ஜூஸ் போன்றவையும் குடித்துகொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal