சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது எது ?!

ஹலோ தோழிகளே... எனக்கொரு சந்தேகம்!

Equal, Splenda மற்றும் Sweet & Low... என்ன வித்தியாசம் இவற்றுள்?
இதில் எது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது... கொஞ்சம் சொல்லுங்களேன்... ப்ளீஸ்.

யாரவது இதற்கு ஒரு பதில் / உங்களுக்கு தெரிந்ததை சொல்லக்கூடாதா...?!

ஏன் இந்த கேள்விக்கு பதில் இல்லை?! வேறு ஏதாவது பக்கத்தில் ஏற்கனவே பதில் இருக்குமாயின் அந்த லின்க்-ஐ யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும். கிடைக்குமா?!

நன்றி!!

அன்புடன்
சுஸ்ரீ

நாங்கல்லாம் கஷ்டமான கேள்விய டீச்சர் கேட்டா காதில வாங்காதது போல உக்காந்து இருபோம்ல:-)

நீங்க சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது எதுன்னு கேட்டுறிக்கீங்களே, அதுக்கு நல்லா தெரிஞ்சவங்க பதில் சொன்னா நல்லா இருக்கும். டயட்டில் இருப்பவங்க Equal,Splenda இதையெல்லாம் யூஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்.

அப்புறம் செலரி இலையில் பொரியல் செய்யலாம் என்று அதிரா எங்கோ சொன்னாங்க. அதிரா உறங்கி எழுந்து கெதியா வாங்கோ. வந்து இவங்களுக்கு அந்த செலரி பதிவில் ஒரு பதிலைப் போடுங்கோ.

பாருங்க இப்ப நான் பதிலே சொல்லாம இருந்திருக்கலாமுன்னு தானே நினைக்கிறீங்க:-)

நாங்கல்லாம் கஷ்டமான கேள்விய டீச்சர் கேட்டா காதில வாங்காதது போல உக்காந்து இருபோம்ல:-)

வானதி,காலையில் நம்ம அருசுவை கடைய திறந்தவுடன் கண்ணில் தென்பட்ட முதல் பதிவு.இன்னும் எனக்கு சிரிப்பு அடக்க முடியல.

2 நாளா யாரும் பதில் சொல்லலைன்னா ... உங்களுக்கு டெஸ்ட் கிட்சனுக்குள் நுழையும் நேரம் வந்துடுச்சின்னு நினத்து .. நீங்களே செய்யனும் ஒகே வா!!!
1) Celery PayaRu thooran ( made with geen mungdal)
2) Celery thokku
3) Celery Carrot sanwich ( tarla dalal)

செய்து பாத்துட்டு ரெசிபி போடுங்க.

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மொதல்ல இந்த இன்பர்மேஷன் யாருக்காக கேக்குறீங்கன்னா எனக்கும் கொஞ்சம் பதில் சொல்ல எளிதா இருக்கும்.ரொம்ப முரண்பாடான கருத்துக்கள் இருக்கு.. அத்னாலதான் கேக்குறேன்...

ஸ்டீவியா ( Stevia) - இயற்கை சுகர் from natural sources unlike the chemicals in other sugar substitutes - ஆனா மருந்து மாதிரி இருக்கு. இந்தியாவிலும் கிடைக்கிரது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆஹா... . டக்கு டக்குன்னு.... வரிசையா பதில்கள்... முதலில் நன்றி!!

வானதி,
உங்க பதிலில் முதல் வரியை பார்த்ததும் வாய்விட்டு நல்லா சிரிச்சேன்.... : ) சூப்பர்!

இலா,
எனக்காக கூகுளித்ததிற்கு மிக்க நன்றி!

ஒன்னும் ஐடியாஸ் இங்கே கிடைக்காததால , நேற்றைக்கே ஒரு டெஸ்ட் ஐய்ட்டம் பண்ணிட்டோம்ல.... : )
கத்திரிக்காய் ஒன்னு இருந்தது. சும்மா அதையும் , நம்ம celery-ஐயும் போட்டு எதோ ஒரு மாடல்-ல ஒரு டிஷ் பண்ணி சாப்பிட்டும் ஆச்சு!!

இருந்தாலும் இங்கு உள்ள அனுபவசாலிகளிடம் இருந்து ஏதாவது புது ஐயிட்டம் கத்துக்கலாமே- என்ற ஆவல், அவ்வளவுதான். : )
கட்டாயம் நீங்க எனக்காக கண்டுபிடித்த இந்த அயிட்டங்களை செய்து பார்த்து சொல்கிறேன், எப்படி இருந்ததென்று.

மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இலா,
நான் கேட்பது என் அம்மாவிற்க்காக. அம்மாவுக்கு சர்க்கரை வந்து ஒரு இரண்டு வருடங்களாக மருந்து எடுத்து வருகிறார். இப்பொழுது டாக்டர்ஸ் ரொம்ப strict-ஆக சுகர் Substitute எடுத்துக்கோள்ள சொன்னதாக தெரியவந்தது. So, இந்தியா போகும்போது கொண்டு செல்லலாமென நினைத்தேன். அதான் இந்த கேள்வி.

அன்புடன்
சுஸ்ரீ

இந்த 3 மே ஒருவிததில் கெமிக்கல் தானே...

ஈக்வுல் பரவாயில்ல.. ஸ்ப்லென்டாவும் நல்லது... ஸ்வீட் அன்ட் லோவும் நல்லாதான் இருக்கு...
டயபடீஸ்க்கு என்றால் ஈக்குவெலுக்கு தான் முதல் வோட்டு அடுத்து ஸ்ப்லென்டா .
ஸ்ப்லென்டாவிலே பேக்கிங்கு என்று தனியாக வருது அதனை வைத்து ரொம்ப ஆசையா இருந்தா ஸ்வீட் செய்யலாம்...
வால்மார்ட்லே இந்த 3ம் 200 பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
2 X 200 = 400 ஒரு வருஷத்துக்கும் மேலே வரும்...
ஸ்டீவியா ஹேல்புட்ஸ் மற்றும் ட்ரெடெர் ஜோஸிலும் கிடைக்கிரது... இது ஒருவித செடியில் இருந்து வருவதால் கொஞ்சம் பயம் இல்லை...

சிலருக்கு இந்த செயற்கைமுறை இனிப்பு பிடிப்பதில்லை...
நம் ஊரில் என்ன அதிக பட்சம் 2 அல்லது 3 முறை காபி இல்லை டீ குடிப்போம். மற்ற உணவுகளில் இருக்கும் குளுக்கோஸில் அளவைத்தான் கட்டுபடுத்த வேண்டும். இப்போ புதிதாக ஒரு `Moolgiri - low glycemic rice' வந்து இருக்கு இதனையும் வாங்கி சாப்பிட சொல்லுங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப ரொம்ப தேங்ஸ் இலா... உங்களுடைய தெளிவான விரிவான பதிலுக்கு .....

அம்மாவிடமும் பேசினேன் இந்த வாரம். அங்கு டாக்டர்-ரிடமும் விசாரித்ததில் ஈக்வுல் உபயோகப்ப்டுத்த சொன்னதாக தெரிந்தது. நானும் ஈக்வுல் இங்குள்ள டார்கெட் (Target)-ல் வாங்கினேன். மற்றும் Costco Wholesale ஷாப்-பிலும் கிடைக்கிறது.

ஸ்டீவியா பற்றி எனக்கு தெரியவில்லை. அதனைப்பற்றி தகவல் சொன்னதற்க்கும் நன்றி! அப்புறம், அந்த அரிசி இன்பர்மேஷனும் புதிது. கட்டாயம் அம்மாவிடம் சொல்கிறேன் இலா.

மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்