சிம்பிள் ஓட்ஸ் சூப்

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு: 1 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஓட்ஸ் ஒரு கைப்பிடி அளவு,
பால் ஒரு கப்,
பூண்டு 3 பல்
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்,
வெண்ணெய் 2 டீஸ்பூன்,
உப்பு சுவைக்கேற்ப.


 

பூண்டுப் பல்லை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

வெண்ணெயை உருக்கி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் ஓட்ஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்குங்கள்.
2 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேகவிடவும்.
பிறகு பால், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறுங்கள்.


மேலும் சில குறிப்புகள்