பச்சை ஆப்பிள் சட்னி

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை ஆப்பிள் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் (வறுத்து பொடிச்செய்துக் கொள்ளவும்)
வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடிச்செய்துக் கொள்ளவும்)
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீனி - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும், அதில் எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைக்கவும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கவும், பூண்டு மற்றும் இஞ்சியை தோல் எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
ஒரு தவாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை லேசாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு துண்டுகளை போடவும். அதையும் லேசாக வதக்கிவிட்டு, ஆப்பிளை சேர்த்து ஒரு தடவை கிளறி விடவும்.
ஆப்பிள் முழ்கும் வரை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்து கெட்டியாக வரும் போது மத்தால் கட்டி துண்டுகள் இல்லாமால் கடையவும்.
பின்னர் அதில் மிளகாய்தூள், சீனி, உப்பு போட்டு கிண்டவும். வினிகரையும் சேர்த்து கிண்டி, வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான ஆப்பிள் சட்னி தயார்.


குழந்தைகளுக்கு தோசை, சப்பாத்தி, பூரிக்களுக்கு சாப்பிட தொட்டுக்கொள்ள கொடுக்கலாம், இந்த ஆப்பிள் சட்னியை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் 15 நாள் வரை கெட்டுப்போகாது.

மேலும் சில குறிப்புகள்