வெந்தயக்கீரை சப்பாத்தி/ பரோட்டா/ரொட்டி

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு -- 1 கப்
வெந்தயக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
கொத்தமல்லி தழை -- 1 ஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/4 டீஸ்பூன்
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா -- 2 சிட்டிகை
மிளகாய் தூள் -- காரத்திற்கு ஏற்ப (1 டீஸ்பூன்)
உப்பு -- தே.அ
வெண்ணைய் -- 1 ஸ்பூன்
கெட்டித்தயிர் -- 1 ஸ்பூன்


 

முதலில் வாணலியில் 1 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி சீரகம், சோம்பு தாளித்து கீரையை போட்டு ஒரு வதக்கு வதக்கி தனியா பொடி, கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி, உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
பின் கோதுமை மாவில் கீரை கலவையை கொட்டி வெண்ணைய், தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி பதம் வந்ததும் உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக சுட்டு இரு புறமும் எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.
சூப்பரான வெந்தயக்கீரை சப்பாத்தி/பரோட்டா/ரொட்டி ரெடி.


இதில் பாலக்கீரை, புதினா காம்பினேஷன் கூட நன்றாக இருக்கும்.
தொட்டுக்கொள்ள கெட்டித்தயிரில் ஆம்சூர் தூள் தூவி சாப்பிடலாம். குருமா எதுவும் தேவை இல்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

nice recepie ,but if u put all fried items into dough ,then rolling will not be easy,so make a small circle of dough keep a spoon of fried items into it,cover it carefully and roll so that the spinach is not coming out

regards