முட்டை தோசை இனிப்பு (குழந்தைகளுக்கு))

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோசை மாவு - அரை கப்
முட்டை - மூன்று
ஏலக்காய் தூள் - ஒரு பின்ச்
சர்க்கரை - எட்டு தேக்கரண்டி
நெய் - தோசை சுட தேவையான அளவு


 

முட்டையில் சர்ர்கரை ஏலக்காய் சேர்த்து நல்ல நுரை பொங்க அடித்து வைத்து கொள்ளுங்கள்.
தோசை தவாவில் தோசையை வார்த்து இந்த முட்டை கலவையை ஒரு கரண்டி அளவு அள்ளி ஊற்றி நல்ல தோசை முழுவதும் பரத்தி ஆங்காங்கே நெய் தெளித்து தீயை சிம்மில் வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து கீழே மொருகலாகவும், மேலே முட்டை வெந்தும் காணப்படும் அப்போது எடுத்து விடுங்கள்.


குழந்தைகளுக்கு இது ரொம்ப பிடிக்கும். தோசைக்கு ஒன்றும் தொட்டு கொள்ள இல்லாத போது இதை செய்து கொடுக்கலாம், மற்றவர்கள் கூட சும்மாவே சாப்பிடலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹா ஹா நினைத்தேன் தலைப்பை பார்த்தது இது நீங்கலாதான் இருக்கும்னு கலக்கல் அக்கா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா இது நான் அடிக்கடி செய்வது தான்.
உங்க பந்தா பொண்ணுக்கு செய்து கொடுங்கள்.
இன்னோரு முறை கொடுங்க என்பாள்.
ஜலீலா

Jaleelakamal

இவளுக்கு கொடுக்கலாம்னுதான் கேட்டேன்...யப்பா ஒரு வலியா என் கேள்விகெல்லாம் பதில் போட்டாச்சு...
ஆ ஆ தாங்சு
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன எத்தனை ஆ போடுவீங்க அங்க பாருங்க, இது குழந்தைகளுக்கு பிடிக்கும், என் மாமானாருக்கும், ஹஸுக்கும் கூட ரொம்ப பிடிக்கும்.

நெய் மணத்தோடு முட்டைதோசை
ஜலீலா

Jaleelakamal