மாசி ஆணம் (சொதி)

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாசி தூள்- 4 தேக்கரண்டி
முட்டை-2
வெங்காயம்-1
பச்சை .மிளகாய்-2(கீறியது)
தக்காளி-1
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
தனியா தூள்-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சீரக தூள்,சோம்பு தூள்-தலா 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால்-1/4 கப்(கெட்டியாக)
இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
எண்ணெய் -3 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம்,கீறிய ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது இவைகளை போட்டு வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும், உப்பு, நறுக்கிய தக்காளி, மற்ற மசாலா தூள்களையும், மாசி தூளையும் சேர்த்து வதக்கவும்.
மசாலா வாசனை போனதும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
5 நிமிடங்கள் கழித்து, முட்டையை அடித்து அதில் ஊற்றி ஒரு போர்க்கால்(Fork) முட்டையை கிளறி விடவும்.(முட்டை சிறு சிறு துண்டுகளாக வருகிற மாதிரி).
கலவை சிறிது கெட்டியானதும் தேங்காய் பாலை ஊற்றி 2 நிமிடங்களில் இறக்கி விடவும்.
இதோ மாசி ஆணம் ரெடி.


இடியாப்பத்துடன் பிசைந்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.
சிலோன் ஹோட்டல்களில் இந்த காம்பினேஷன் உணவு பிரபலமானது.

மேலும் சில குறிப்புகள்


Comments

what do u meant by maasi thool?

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

what do u meant by maasi thool?

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

அன்புள்ள செயஷ்ரி,
மாசிதூள்னா அது ஒரு வகை மீன் அதை காய வைத்து பவுடன் பண்ணியதுதான் இந்த மாசிதூள்....தூனா மீன் அது பெயர் இன்குள்ள ஒரு சில கடைகளில் கிடைக்கும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

thanks for ur useful information

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

hi aunty! naan indru ithai seithu parthaen. nalla vanthathu. thank u. enda husbanditku pidithu poi vittathu. sorry for typing in english.

All is well.

ஜலிலாக்கா ஆண்டின்னு doreen போட்டதை பார்த்ததும் எனக்கு ஒரே சிரிப்பு அக்கா போஇ ஆண்டியாகிட்டீங்கன்னு..அப்புறம் மேலே போஇ பார்த்தா மெகர் அண்ணி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு