மைதா ரவை தோசை

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

மீந்து போன தோசை மாவு - ஒரு கப்
மைதா - கால் கப்
ரவை - அரை கப்
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

ரவையை ஐந்து நிமிடம் ஊற வைத்து அத்துடன் மைதா, தோசை மாவு, வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி ஐந்து நிமிடம் ஊறியதும் தோசைகளாக வார்க்கவும்.


மீந்து போன தோசை மாவில் என்ன என்னவோ செய்யலாம். அப்பம் கூட செய்யலாம், ஊத்தாப்பம், மைதா ரவை தோசை, அடை, வெங்காய கொத்தமல்லி தோசை போன்றவை
இதற்கு தொட்டு கொள்ள சர்க்கரை போதும், இட்லி மிளகாய் பொடியும் நல்லா இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

மீந்து போன தோசை மாவில் கூட இவ்வளவு சுவையான தோசை செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டேன். மிகவும் சுவையாக இருந்தது . நன்றி .

டியர் எமில்டா மீந்து போன மாவில் தோசை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
சுவையாக இருந்தது என்று சொன்னீர்கள் ரொம்ப சந்தோஷம்.
ஜலீலா

Jaleelakamal