தம் ஆலூ 1

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
தயிர் - கால் கப்
பட்டை - சிறிய துண்டு
இஞ்சி - சிறிய துண்டு
இலவங்கம் - 3
ஏலக்காய் - 3
பச்சை மிளகாய் - 3
மிளகு - 5
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சர்க்கரை - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

மிளகு தனியா ஆகியவற்றை வறுத்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பட்டை, இலவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை வேக வைத்துத் தோலுரித்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலா, தயிர் ஆகியவற்றை உருளைக்கிழங்கோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் சீரகம் தாளித்து உருளைகிழங்கைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து பொடித்த மசாலாவைத் தூவி, சிறிது நேரம் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்