ராகிசேமியா வெஜிடபிள் இட்லி

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ராகிசேமியா - 2 கப்
கேரட் - 1/2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1/2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
பட்டன் மஸ்ரூம் - 1/2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/4 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் - 1/4 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - 1/4 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் 1 1/2 டீஸ்பூன் உப்பு கலந்து அதில் ராகிசேமியாவை போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ளது போல் கேரட், பீன்ஸ், பட்டன் மஸ்ரூம், வெங்காயம், தக்காளி, இஞ்சி, வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு தவாவில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் போட்டு பொரிந்ததும், அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் கேரட், பீன்ஸ், மஸ்ரூம், இஞ்சி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும் கடைசியில் தக்காளி போட்டு வதக்கவும் பின் வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாத்தூள் போட்டு வதக்கவும், பின்னர் காய்களுக்கு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஊறவைத்த சேமியாவை எடுத்து தண்ணீரை வடிகட்டவும். வடிகட்டிய பின் அதில் காய்கலவையை கலந்து கொள்ளவும்.
இட்லி தட்டில் கொஞ்சம் எண்ணெய் தடவி அதில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து குழியில் வைத்து, வேகவைத்து எடுக்கவும். சுவையான ராகிசேமியா வெஜிடபிள் இட்லி தயார்.


இந்த ராகிசேமியா வெஜிடபிள் இட்லி டயாபெட்டிக்ஸ்காரர்களுக்கு ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஹா அருமையான டிஷ், டயட்டில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஆனால் செய்முறையில் 1, 2 , 3 போடாதீர்கள் அப்படியே அடிங்க அதே அழகா பாயிண்ட் பாயிண்டா வரும்.

ஜலீலா

Jaleelakamal

ராகிசேமியா இங்கு கிடைக்குமா தெரியாது. இந்தியாவில் இது என்ன ப்ராண்டில் கிடைக்கிறது. முடிந்தால் சொல்லவும். என் தோழி வருகிறாள் சொல்லாம் என்று தான்.

அன்பு விஜி
brand name sure ஆ சொல்கிறேன்
தேங்யு நீங்கள் இதுவரையில் ராகி சேமியா உபயோக படுத்தியது இல்லையா?அதிலேயே வரைட்டியா டிஸ் செய்யலாம்.ஓ.கே பிராண்ட்டோட பெயர் அணில் ராகி சேமியா, கணேஷ் ராகி சேமியா,நீங்களும் டிரை பண்ணி பாருங்கள், எனது 1.1/4 வயது மகனுக்கு இஷ்டம் இந்த இட்லி.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எனக்கு இதுவரைக்கும் ராகில ஸ்வீட் மட்டும் தான் செய்ய தெரியும் அதுவும் ரொம்ப ஈஸி. இத பார்த்தவுடனே செய்யனும் போல இருக்கு. ஆனா மேடம் ராகி வேக வைக்கும் போது சில நேரங்களில் குழைந்து விடுகிறது எவ்வளவு தண்ணி வைக்கனும் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

மஹா ஊருக்கு போனா தான் ராகி சேமியா கிடைக்கும்.
பிறகு செய்து பார்க்கிறேன்.

மஹா மேம் எல்லாம் வேண்டாம் ஜலி அக்கான்னே குப்பிடுங்கள்.

காயத்திரி ராகி சேமியாவை தண்ணீரில் அலசி ஒரு நிமிடம் (அ) ரண்டு நிமிடத்திற்குள் கழித்து இட்லி பானையில் வைத்து அவிக்கனும்
ஜலீலா

Jaleelakamal

முதலில் நன்றி எனது குறிப்பை பார்த்து உங்கள் சந்தேகங்களை கேட்டதற்கு.எனது குறிப்பை முதலில் நன்றாக வாசிக்கவும். நீங்கள் ராகி சேமியாவை சாதரண தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.அதை காய்கலவையோடு கலந்து இட்டிலி சட்டியில் 5 நிமிடம் வேக்வைத்து எடுக்கவும்.குழையாது செய்து பார்ருங்கள்.பின்னர் பின்னுட்டம் அனுப்பவும்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எனக்கு கூட மஹான்னு ஒரு ப்ரண்ட் இருக்கா. ரொம்ப நன்றி மஹா நான் மீண்டும் ஒரு முறை அந்த குறிப்பை படித்து விட்டு இன்று இந்த இட்லி சாப்பிட்டாச்சு சூப்பர் டேஸ்ட் வித்தியாசனா இருந்திச்சு. சிரமத்திற்கு மன்னிக்கவும் அப்பவே நான் படித்திருந்தால் உங்களுக்கு கஷ்டம் கொடுத்திருக்க மாட்டேன். நன்றி மேடம்.

ஹலோ காயத்திரி
என்னை நீங்கள் மேடம் என்று குறிப்பிடவேண்டாம் just call me மஹா now u add me that u have one friend name maha so just call maha ok ,thats ok
no problem yar

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அன்பு ஜலீலாபானு மேம்

ரொம்ப சந்தோஷம் குறிப்பை பார்த்து பதில் தந்தமைக்கும்,அதை விட சந்தோஷம் திருத்தங்கள் செய்ய சொன்னதற்கும்.நீங்களும் செய்து பர்ருங்கள் மேம் ரொம்ப நன்றாக இருக்கும்,நான் சொல்வதைவிட சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும்.உங்களுக்கு உங்கள் மகன் சர்ட்டிபிகேட் தரவேண்டும்.எனக்கு எனது கணவர் சர்ட்டிபிகேட் தந்தால் தான், கரகெட்டா சொல்வார்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா சேமியவை காய்கறியுடன் சேர்த்தால் இட்லி உதிரியகவரதா தயிர் சேர்க்கவெண்டுமா

hai jothi

மிக்க நன்றி எனது குறிப்பை பார்த்து உங்கள் சந்தேகங்களை கேட்டதற்கு.நான் தயிர் சேர்க்கவில்லை ஆனால் நல்ல சாப்ட்டா வந்தது,மற்றபடி புளிப்புதன்மைக்கு தான் தக்காளி சேர்த்துள்ளேன்.நீங்கள் அந்த போட்டோவில் பார்க்கலாம். காய்களை கலந்து இட்டிலி தட்டில் வேகவைத்து அழகாக தனியாக நீங்கள் எடுத்துவைக்கலாம்.நாம் வேகவைத்து எடுத்த இட்டிலியை பிய்த்து சாப்பிடுவதை போலவே இந்த ராகி இட்டிலியையும் பிய்த்து சாப்பிடலாம்.நீங்க வேணும் என்றால் தயிர் சேர்த்து செய்துபார்த்து பதில் கூறவும்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China