Celery -ஐ எந்தெந்த விதத்தில் சமைக்கலாம்?!!

Celery-ஐ எந்தெந்த விதத்தில் சமைக்கலாம்?!!

என் இன்றைய சந்தேகம் இது... : )
சென்ற வாரம்., Celery ஒரு கட்டு வாங்கினேன். ஒரு முறை, பொடியாக நறுக்கிப்போட்டு Chinese Fried Rice செய்தேன். மற்றொரு முறை வெஜிடபிள் சூப்-பில் போட்டென். இன்னும் Celery காலியாகவில்லை. இரண்டு உணவுமுமே நன்றாக இருந்தது. ஆனாலும் அதையே திரும்பவும் செய்யாமல் வேறு ஏதாவது செய்ய விரும்புகிறேன்.

வேறு என்ன என்ன சமைக்கலாம் இந்த Celery-ஐ வைத்து... ?! ideas ப்ளீஸ்....

ஏனோ தெரியவில்லை... ?! Celery - மேல் எல்லோருக்கும் ஒரே கோபம் போலருக்கெ?!!

ஒரு பதிலும் இன்னும் வரவில்லை... : (
என் Celery -யும் பாவம். Fridge-லேயெ உறங்கிக்கொன்டு இருக்கிறது! : )

அன்புடன்
சுஸ்ரீ

உங்களுக்காக நான் செலரியில் ஒரு சமையல் குறிப்பு குடுத்துள்ளேன் புதுசு கலாபுதுசில் பாருங்கள் .அப்புரம் யாரும் சமைக்கலாம் பகுதியில் எனது குறிப்பான சைனீஸ் நூடுல்ஸ் செய் முறையில் செலரியும் இடம் பெரும் பாருங்கள்,மேலும் நான் மல்லி பொதினா வாங்கும் போட் இந்த செலரியும் அடிக்கடி வ்ஹுஆங்குவதுன்டு எங்கல் வீட்டில் அடிக்கடி சைனீஸ் சமையல் இடம்பெருவதால் எனக்கு தேவைப்படும்

ரொம்ப நன்றி ரசியா!

Celery பற்றி குறிப்பு கொடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி எழுதியதற்க்கு ரொம்ப நன்றி ரசியா. கட்டாயம் இரண்டு ஐயிட்டம் ரெசிப்பியும் பார்த்து ட்ரை செய்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

மீண்டும் ஒரு பழைய இழையை மேலே கொண்டு வருகிறேன். ;)
செலரி.. தண்டுகளை அப்படியே சாப்பிடலாமே. ஏதாவது ஒரு டிப், சல்சா தொட்டுச் சாப்பிடலாம். ஆரோக்கியமான ஸ்னாக் இது. நடுவே உள்ள தண்டானால் தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. சுவையாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்