ராகி வெஜிடபிள் தோசை

தேதி: May 21, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ராகிமாவு - ஒரு கப்
மைதாமாவு - ஒரு கப்
பச்சரிசிமாவு - 1/2 கப்
ராகிசேமியா - 1/2 கப்
வெங்காயம் - 1/2 கப் (மிகப்பொடிப்பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 கப் (மிகப்பொடிப்பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 1/4 கப் (மிகப்பொடிப்பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (துருவியது)
காலிஃப்ளவர் - 1/2 கப் (துருவியது)
இஞ்சி - 1/4 கப் (துருவியது)
வெங்காயத்தாள் - 1/4 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - 1/4 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், அதில் 2 சிட்டிகை உப்பு கலந்து அதில் ராகி சேமியாவை போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ளது போல் காய்கள் அனைத்தையும் துருவ வேண்டியவற்றை துருவவும் நறுக்க வேண்டியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு தவாவில் எண்ணெய் விட்டு அதில் சீரகம், கடலைப்பருப்பு போட்டு பொரிந்ததும், அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய், கேரட், காலிஃப்ளவர், இஞ்சி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
கடைசியில் தக்காளி போட்டு வதக்கி பின் வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாத்தூள் போட்டு வதக்கவும், பின்னர் காய்களுக்கு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஊறவைத்த சேமியாவை எடுத்து தண்ணீரை வடிகட்டவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் ராகிமாவு, மைதாமாவு, பச்சரிசிமாவு இவற்றை தண்ணீர் விட்டு கட்டிதட்டாமல் கலக்கவும்.
பின்னர் வடிகட்டிய ராகி சேமியாவையும், காய்கலவையை கலந்து தோசைமாவு பதத்திற்கு கலந்துக்கொள்ளவும். கடைசியில் உப்பு சரிப்பார்த்து தேவை என்றால் போட்டுக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் போட்டு நன்றாக சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை வார்க்கவும், எண்ணெயை தோசையை சுற்றி விட்டு அல்லது நெய் விட்டும் சுடலாம்.
தோசை நன்றாக வேகவைத்து எடுக்கவும். சுவை மற்றும் மணமான ராகி வெஜிடபிள் தோசை தயார்.


இந்த தோசை முக்கியமாக குழந்தைகள் மற்றும் டயாபெட்டிக்ஸ்காரர்களுக்கும் நல்ல சிறந்த உணவு. இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னி, வெங்காய தொக்கு அப்படி எதை வைத்து வேண்டுமானாலும் சாப்பிடலாம், அல்லது வெறும் சீனி கூட போதும், பெரியவர்கள் 2 சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விடும். முக்கியமாக குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்